31

31

அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி வானில் பறந்த தலிபான்கள் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் !

ஆப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபான்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி உறைய வைக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்நாடு முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் தலிபான்கள்  துப்பாக்கி குண்டுகளை முழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில், அப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொக்கவிட்டபடி தலிபான்கள்  பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தலிபான்களின் அதிகாரபூர்வ ஆங்கில ட்விட்டர் பக்கத்தில் (தலிப் டைம்ஸ்) தான் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்குக் கீழே, நமது விமானப் படை. இப்போது இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படையின் ஹெலிகாப்டரில் காந்தஹார் நகரை ரோந்து செய்தபோது.. என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஒரு சடலம் தொங்குவது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து ஒரு சிறிய வார்த்தை கூட  தலிபான்கள் கூறவில்லை. அந்த சடலம் அமெரிக்க வீரருடையதா இல்லை பொதுமக்களுடையதா என்ற விவரம் ஏதுமில்லை. இருப்பினும் அதனைப் பகிர்ந்து வரும் பலரும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே ஒரு மனிதர் தானா இல்லை ஏதும் பொம்மையா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெட் க்ரூஸ், இந்த அச்சுறுத்தும் வீடியோ, ஆப்கானிஸ்தானில் ஜோ பைடனால் நடந்த பேரழிவின் ஒரு சாட்சி. அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில்  தலிபான்கள்  பயணிப்பதும் அதில் ஒருவரை தொங்கவிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

“பைடனின் முட்டாள்தனத்தால் ஆப்கான் விடயத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது.” – முன்னாள் ஜனாதிபதி காட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகலை அடுத்து அந்த நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் மீது முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அமெரிக்க படைகள்  இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியமை தொடர்பில் கூறிய போதே டிரம்ப்   தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப்  கூறியதாவது ,

ஆப்கானிஸ்தானில் இருந்து ஜனாதிபதி  டிரம்ப்  வெளியேறிய விதம், ஜோ பைடன் நிர்வாகத்தின் போரில் இருந்து பின் வாங்கியது ஆகியவை மோசமாகவே பார்க்கப்படும். திறமையாக கையாளவில்லை.

வரலாற்றிலே ஜோ பைடன் நிர்வாகம் ஒரு போரை மோசமாக கையாண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப தருமாறு கோரப்பட வேண்டும்.

அதை திரும்ப ஒப்படைக்காவிட்டால் நாம் இராணுவப் படையுடன் அங்கு சென்று அதனை திரும்பப் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அந்த ஆயுதங்களை வெடிக்க செய்து அழிக்க வேண்டும். இதுபோன்ற பலகீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள்தனமான செயலை யாரும் நினைத்தது கூட இல்லை.

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது. தலிபான்களிடம் சரணடைந்து விட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க படைகள் ஈடுபட்ட போது மீட்பு விமானத்தில் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.

‘யார் இவர்’

யார் இவர்:
இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் இதனைக் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

‘யார் இவர்’ அறிமுகம்: இலங்கைத் தமிழ் சமூக ஆளுமைகள் பற்றிய விபரத் திரட்டு. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற; தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை, உழைக்கின்றவர்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி. தேசம் வெளியீட்டகம் மேற்கொள்ளும் இந்த விபரத்திரட்டு காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு தொகுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கம்: எமது ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு எமது ஆளுமைகளை பற்றிய குறிப்புகளைக் கையளிப்பதுமே ‘யார் இவர்’ வெளியீட்டின் நோக்கம். மேலும் துறைசார்ந்த ஆளுமைகளிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தவும் தமிழ் சமூகத்தின் வாழ்நிலையை மேம்படுத்த நினைப்பவர்களிடையே ஒரு வலைப்பின்னளை ஏற்படுத்தி செயற்திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

‘யார் இவர்’ குழு: நூலகவியலாளர் என் செல்வராஜா; ஊடகவியலாளர் த ஜெயபாலன்; ஆவணப் பதிவாளர் சி ஹம்சகௌரி; சமூக செயற்பாட்டாளர் க அரிமர்த்தனா.

தகவல் பாதுகாப்பு: நீங்கள் வழங்குகின்ற தகவல்களை ‘தேசம் பதிப்பகம்’ மட்டுமே கையாளும். வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படமாட்டாது. இதில் தங்களுடைய தொலைபேசி இலக்கங்கள் நீங்கள் வாழும் நாடுகளின் சர்வதேச தொடர்புக்கான இலக்கத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல் மற்றும் முகவரிகள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. ஆனால் தேசம் வெளியீட்டகம் தொடர்புகளை மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட விபரங்களை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

கவனிக்க: பதிவுகளை கேட்கப்பட்ட கேள்விக்கு அமைய சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சில பகுதிகளை in English / தமிழில் என்று குறிப்பாகக் கேட்டுள்ளோம். தயவு செய்து கேட்கப்பட்ட மொழியில் பதிவை மேற்கொள்ளவும். இப்படிவத்தை சமர்ப்பிற்கு முன் மீளவும் தகவலைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

கால ஒழுங்கு: கல்வி, தொழில், வெளியீடுகள், விருதுகள் அனைத்தும் கால ஒழுங்கில் முன்னையவை முதலிலும் பின்னையவை இறுதியிலும் வரவேண்டும். வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி உங்கள் பதிவை ஒழுங்குமுறையில் பதிவிடவும். மேலும் காற்புள்ளி , அரைப்புள்ளி ; மற்றும் முற்றுப்புள்ளி . என்பவற்றை உதாரணத்திற்கு அமைய பயன்படுத்தவும்.

‘யார் இவர்’ ஆவணப்படுத்தல் சர்வதேச ஆவணப்பதிவு விதிமுறைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதால் தயவு செய்து பதிவுகளை வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி அதற்கு அமைய மேற்கொள்ளவும். ஆங்கிலத்தில் பதிவிடும் போது சின்ன எழுத்தையே (small letters) பிரதானமாகப் பயன்படுத்தவும். முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தில் (Capital Letters) அமையலாம்.

மேலுள்ள பதிவிடும் முறையயைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு ஏற்படும் வேலைப்பழுவை நீங்கள் குறைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

இறுதியாக, இப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைச் சமர்ப்பித்த பின்; உங்கள் புகைப்படம் ஒன்றை, உங்கள் முழுப்பெயருடன் whoiswhotamil@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

த ஜெயபாலன் (தேசம்)
‘யார் இவர்’ வெளியீட்டுக் குழு
whoiswhotamil@gmail.com

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN0GSPSE8FyXiZ03VUzqAMQ5eNTIdkScXdX15q8LjGqojlUw/viewform

குறிப்பு: இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

முடிவுக்கு வந்தது 20 வருட போர் – ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் இறுதி இராணுவ வீரர் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர் ஆண்டுக்குக் கணக்கில் நீண்டது. தாலிபன்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர். இருதரப்பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

 

இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியா கவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் திகதிக்குள்  அமெரிக்கப்படைகள்  முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் முழுமையாக வந்தது.

இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து இன்று வெளிேயறியது.

இதுகுறித்து அமெரிக்க மத்தியப்படையின் காமாண்டர் ஜெனரல் ஃபிராங் மெக்கென்ஸி நிருபர்களிடம் கூறியதாவது:

“ ஆப்கானிஸ்தானிலிருந்து  அமெரிக்கப்படைகள்  முழுமையாக வெளியேறிவிட்டன என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன். இதன் மூலம் அமெரிக்க மக்கள், ஆப்கான் மக்கள், பிறநாட்டவர் என அனைவரையும் வெளியேற்றும் திட்டமும் நிறைவடைந்தது, 20 ஆண்டுகாலப் போரும் முடிந்தது. அமெரிக்க அரசைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டனர்.

கடைசியாகப் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க மக்கள் யாருமில்லை. ராணுவத்தினர் அனைவரும் வெளியேறிவிட்டனர். தகுதியான ஆப்கான் மக்கள், அமெரிக்கர்கள் யாரேனும் இருந்தால், இன்று வரை வெளியேற வாய்ப்பு வழங்கப்படும். 20 ஆண்டுகால போர் சில மணிநேரங்களில் முடிவுக்குவர உள்ளது.

இது சாதாரணப் போர் அல்ல, இந்த போரில் 2,461 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிலிருந்து  அமெரிக்கப்படைகள்  வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றுள்ளனர். தலிபான்கள் பெர்சிய மொழியில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ அனைத்து முஜாகிதீன்கள், வீரர்கள், நம்முடைய தேச மக்களுக்கு வாழ்த்துகள். இன்று, அனைத்து வெளிநாட்டவர்களும் நம் தேசத்தைவிட்டு, தியாக பூமியைவிட்டு வெளியேறிவிட்டனர்.