05

05

தபால் நிலையங்களில் வாக்காளர் அட்டைகள்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு இன்று (5) முதல் தேர்தல் தினம் வரை தபால் நிலையங்களினூடாக வாக்காளர் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இரானின் இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலையை ஆய்வாளர்கள் பார்வையிடுகின்றனர்

051009nuclearsite.jpgஇரான் சமீபத்தில் அறிவித்த குவாமில் இருக்கின்ற இரண்டாவது அணு செறிவாக்கும் ஆலையை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அக்டோபர் 25 ம் தேதி அன்று பார்வையிடுவார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹமது எல்பராடி கூறியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மொஹமது எல்பராடி, இரானுடனான உறவு குறித்து சாதகமாக பேசினார். தாங்கள் மோதல் நிலையில் இருந்து இப்போது ஒளிவுமறைவற்றதன்மை, புரிந்துணர்வு என்ற நிலைக்கு செல்வதாகவும், இருந்தாலும் ஒரு சில கவலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலை குறித்த செய்தி மேற்கத்தைய நாடுகள் இடையே இரானின் அணுசக்தி குறிக்கோள்கள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்ற அணுசக்தி திட்டங்களை போல இந்த ஆலையும் அமைதி பயன்பாட்டிற்கு மட்டுமே என இரான் கூறிவருகிறது.

மக்கள் வங்கியும் நீச்சல் தடாகமும் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

0501009.jpgமாத்தறை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் புதிய நீச்சல் தடாகமும் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

மாத்தறை நகரில் சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த போதே ஜனாதிபதி மேற்படி இரு நிகழ்விலும் கலந்து கொண்டு பதினேழரைகோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையையும் ஒன்றரை கோடி ரூபா செலவிலான நீச்சல் தடாகத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நேற்றுக் காலை மாத்தறை நகர புதிய மக்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் வங்கித் தலைவர் டபிள்யூ. கருணா ஜீவ உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றதுடன் வங்கிக் கிளையைத் திறந்து வைத்த ஜனாதிபதி வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து அதன் நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜீவன் குமாரதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாயாரின் நினைவாக நேற்று மாத்தறை பாலடுவ குணரத்ன வித்தியாலயத்தில் இடம்பெற்ற புண்ணியோற்சவ நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அங்கு பிரசன்னமாகியிருந்த 600 புத்தபிக்குகளுக்கும் அன்னதானம் வழங்கிச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் வாகனமொன்றில் பெருந்தொகை ஆயுதங்கள்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகனமொன்றிலி ருந்து பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிரு ப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

குருநாகல் மாஸ்பொத்த பகுதியில் வைத்து 56-9968 என்ற இலக்கம் கொண்ட வான் ஒன்றிலிருந்தே சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு, இலத்திரனியல் டெட்டனேட்டர்கள், கிரனைட்டுகள், ரவைகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வாகனத்திலிருந்து நேற்று 340 – ரி56 ரவைகளும், 5 கிலோ கிராம் நிறை கொண்ட ஆறு கிளேமோர் மைன்கள், 04 – ரி-56 தோட்டாக்களும், 100 – இலத்திரனியல் டெட்டனேட்டர்களும், 288-9 மில்லி மீற்றர் ரவைகளும், 02 – ரிமோட் கருவிகளும், 06 – 9 வோல்ற் பற்றரிகளும், 06 கிளேமோர் குண்டு பொருத்திகளும், மைக்ரோ பிஸ்டல் ஒன்றும், 50 மீற்றர் டெட்டனேட்டர் கோர்ட்டும், 06 – கிரனேற் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.