பணிதல் மறுத்தவர் தோழர் பரா என்ற தலைப்பில் நினைவு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 5ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்வு லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுஸில் மாலை இரண்டு மணிமுதல் மாலை ஒன்பது மணிவரை நடைபெறவுள்ளது.
தோழர் பரா என அன்புடன் அறியப்படும் குமாரசாமி பரராஜசிங்கம் 2007 டிசம்பர் 16ல் உயிரிழந்தார். புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான இவர் தனது மரணத்தின் பின்னும் பலரது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அவரது மரணத்தை அடுத்து பரிஸ் ‘அம்மா’ மனோ தேசம்நெற் இல் பதிவு செய்த அஞ்சலிக் குறிப்பில் தோழர் பராவை இவ்வாறு நினைவு கூறுகிறார் ”பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது.”
தோழர் பராவின் மறைவைத் தொடர்ந்து தேசம்நெற்றில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்களும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்:
தோழர் பரா என்ற சிந்தனையானுக்கு எங்கள் இறுதி மரியாதை! :சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்
இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன்
ஓரு தலித்திற்கு வாழ்வு கொடுத்த ஆதிக்க சாதியின் உண்மைக்கதை :ஜீவமுரளி
வழமையான? அங்கீகரித்தல்? பெண் கொடுத்தல்? தாமதமாகச் சில குறிப்புகள் :சந்துஸ்