Multiple Page/Post

குற்றச்செயல்களோடு, வதந்திகளும் யாழ்ப்பாண மக்களை அச்சமடைய செய்கின்றன!

Jaffna Townயாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.  கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )

 இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத்  தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி  நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது  யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது  மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கம்.

glpeiris.jpgஅவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றவை எனக் கருதப்படும் அவசரகால விதிமுறைகளே இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தை இப்போதைக்கு முழுமையாக நீக்கமுடியாது என்றும் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

மேல் மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள்

மேல் மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக 5 பேர் இன்று(04) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு மாவட்டம் அஜ்மல் மவ்ஜுத், ஸ்ரீ.ல.சு.க. களுத்துறை மாவட்டம் எம்.எம்.எம்.அம்ஜாத், களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி. லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, மற்றும் உதயசாந்த பெரேரா, சுதத் மத்துமகமகே ஆகியோரே மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாவர்

ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை; பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு சாதகம்

glpeiris.jpgஜீ.எஸ்.பி.  பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் இலங்கைக்குச் சாதகமாக வுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேற்படி வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவித்த அமைச்சர் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தலை¨யிலான குழு முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இதற்கென வெளிநாட்டமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கே. கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்று முதல் 4 தினங்கள் கூடும்

parliament.jpgபாராளு மன்றத்தை இன்று (4) முதல் நான்கு தினங்கள் கூட்டுவதற்கு நேற்று (3) நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்

tissainayagam.bmpபுலிகளி டமிருந்து நிதி பெற்றமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழத்தை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு

glpeiris.jpgஇலங் கைக்கு வெளியே புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்க அரசு தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தினை கையாளுவது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயரிஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது அமைச்சுப் பொறுப்புக்களை இன்று வெளிவிவகார அமைச்சில் கையேற்ற வைபவத்தின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார் என நீதிமன்றினால் 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய தகவலையயும் அமைச்சா; இங்கு தெரிவித்தார்.

விதவைகள் மறுவாழ்வு திட்டம்; ரூ. 25 கோடி வழங்க இந்தியா இணக்கம்

hisbullah.jpgவடக்கு,  கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்க இணக்கம் தெரிவி த்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியத் தூதுவர் அசோக்காந்தை உத்தியோகபூர்வ மாக சந்தித்துப் பேச்சு நடத்தி யுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையின்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். தாம் தமக்கான அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பின் முதல் நடவடிக்கையாக வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்பந்தமாக இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய பிரதியமைச்சர் இப் பேச்சுவார்த்தையின் பயனாக உடனடியாக 25 கோடி ரூபா நிதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் 49, 000 பேர் உள்ளனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு சுய தொழில்களை மேற்கொள்வதற்கு மேற்படி 25 கோடி ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளது.

இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கமாகுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இன்று உலக ஊடக சுதந்திர தினம்; உலகில் 97 ஊடகவியலாளர் 2009ல் பலி

secretary-general.jpgஉலக ஊடக சுதந்திர தினம் இன்றாகும். இத்தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்- கீ- மூன் விடுத்துள்ள செய்தியில் ஊடகங்களில் பணிபுரியும் அனைவரையும், பாதுகாக்கவேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் கடமையாகும்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை புரிவோர் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவதும் இந்த பாதுகாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பேச்சு சுந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாகும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணத்தின் 19 ஆவது ஷரத்தில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலை களுக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கி ன்றேன். இந்த கொலைகளுக்கு காரண மானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பான். கீ மூன் தனது செய்தியில் கூறியுள்ளார்.