வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை நிலவரத்தை நேரில் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டுமென மல்வத்த பீடாதிபதி வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை குறித்து சர்வதேச நாடுகளிடையே காணப்படும் பிழையான கருதுகோள்களை களைய வேண்டுமாயின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது, மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் காலத்தில் பயங்கரவாதம் தலை எடுக்காமலிருக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
மூன்று நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான ராஜதந்திரிகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தங்கள் நியமனங்களைக் கையளித்தனர். மியன்மார் மற்றும் போலாந்துக்கான தூதுவர்கள் இருவரும்; உகண்டாவுக்கான உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நியமனங்களை சமர்பித்தனர்.
நிமிஷா ஜே மத்வானி உகண்டா உயர்ஸ்தானிகராகவும்; யூ ஓஹ்ன் த்வின் மியன்மார் தூதுவராகவும் பேராசிரியர் பியட்ர் க்ளோகவுஸ்கி போலாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஐநூறு கிலோவுக்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தினர், மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் ரி-என்.ரி ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து – 260 கிலோ, ரி.என்.ரி. சிலப் 85 கிலோ, குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் மூலவெடிமருந்து – 83 கிலோ, பெட்ன் ரக வெடிமருந்து – 11 கிலோ, சி – 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து – 36 கிலோ, கறுப்புப் பவுடர் – 13 கிலோ, வெடிமருந்துகள் – 16 கிலோ, ஆகிய பலதரப்பட்ட வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளனர்.
குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் – 530 கிலோ, அலுமினியக் குண்டுகள் – 25 கிலோ, குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் கறுப்பு மற்றும் சிவப்பு நிற சுவிட்சுகள் – 17,300 மற்றும் 517 பியுஸ்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, 55 கிலோ எடையுள்ள இனங்காணப்படாத இரசாயனப் பவுடர்களையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். இவற்றில் 35 கிலோ கறுப்பு நிற இரசாயனப் பவுடரும் 20 கிலோ வெள்ளை நிறப்பவுடரும் அடங்கும்.
ஆர்.பி.ஜி. குண்டுகள் – 44, கைக்குண்டுகள் – 29, கிளேமோர் குண்டுகள் – 8, ஜொனி ரக கண்ணிகள் – 108, மிதி வெடிகள் – 98, ரி. 56 ரக துப்பாக்கிகள் உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பொருத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் என்பவற்றையும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையணியினர் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் 58 வது படையினர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது.
ரி-56 ரக துப்பாக்கிகள் – 206, வெடிக்கவைக்கும் கருவிகள் – 1000, வெடிமருந்து பொதிகள் – 11, தற்கொலை அங்கிகள் – 03, சினைப்பர் ரக துப்பாக்கிகள் – 02, 40. மி. மீ. ரக கிரனைட் லேஞ்சர் குண்டுப் பெட்டிகள் – 03, ஒட்சிசன் சிலின்டர்கள் – 13, அசிட் கலன்கள் – 15 அதாவது 5 லீட்டர் கடல் கண்ணிகள் – 06 சுழியோடி உடைகள் 120 மி.மி. மோட்டார் குண்டுகள் – 44 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 13 60 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 39 உட்பட ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
வடக்கில் யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மேலும் 160 மில்லியன் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் ஏற்கெனவே 80 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. இதன்படி வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இதுவரை 240 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
தற்போது வழங்கப்படவுள்ள நிதியைக்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும். இப்பணியை டானிஷ் டெமினிங் குழுவும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமும் மேற்கொள்ளும்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் கண்ணிவெடிகளற்ற இலங்கை எனும் இலக்கை அடைவதற்கு தொடர்ந்தும் உதவியளித்து வரும் ஜப்பான், இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் பணிகளுக்காக கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2250 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
மக்களுடன் நேரடியாகப் பேசிய அவர் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். வவுனியா செயலகத்திற்கு விஜயம் செய்து மாவட்ட அரச அதிபருடன் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்களான றிசாட் பதியுதீன், அமீர் அலி ஆகியோரும் வந்திருந்தனர்.
இலங்கையில் சிறந்த சமாதான சூழல் நிலவுவதையடுத்து 32 இந்திய கம்பனிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீ. எல. பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பலமும் ஆளுமையும் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டே இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கையில் தமது வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தின் மீதான விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் மேற்படி கட்டளைச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்தினை ஆரம்பித்து உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் ஆடைத் தொழில் வீழ்ச்சியடைந்து பெருமளவிலானோர் வேலை வாய்ப்புக்களை இழப்பர் என பலர் தெரிவித்தனர். எனினும் அக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில் இன்று ஆடைத்தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் சிறந்த அரசியல் சூழல் இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலானது வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு சிறந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது. பலம் பொருந்திய பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவரும் தற்போதைய நிலையில், அண்மைக்காலமாக எமது பொருளாதாரத்தில் அந்நிய செலாவணியின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை, காத்திரமான செயற்பாடுளே இதற்குக் காரணமாகும். குறிப்பாக தேயிலை, இறப்பர், தெங்குப்பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி அளவுகள் அதிகரித்துள்ளன. கோப்பி ஏற்றுமதியில் சதவீத அதிகரிப் பையும், ஆடைத்துறை ஏற்றுமதியில் 13 வீத அதிகரிப்பும் இதில் குறிப்பிட கூடியதாகும்.
காவல்துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.
![]()
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் சிவிலியன்களை காரணம் காட்டி குறிப்பிட்ட சில மேற்கு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு எம்மை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தமை பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் காப்பாற்றுவதற்காகவே என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் தீவிரவாத பிரச்சினைகள் என்றும் முடிவுக்கு வரக்கூடாதென்ற நீண்டகால நோக்கிலேயே சில நாடுகளில் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த திங்கட்கிழமை (25) துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவிலியன்களுக்காக ஒரு குளியலறையைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை. மாறாக எல்.ரி.ரி.ஈ யினருக்கு பணமும் இராணுவ ஆலோசனைகளையுமே வழங்கி வந்துள்ளனர்.
புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில படகுகள், யுத்தக் கப்பல்கள் அவற்றுக்கான இயந்திரங்கள் என்பன தொண்டர் நிறுவனங்களின் நிபுணத்துவம் பெற்றவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் இறக்குமதிக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம் கோரி லிப்டன் சுற்றவட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த குறித்த சில பாதுகாப்புத் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களும் புலிகளுக்குச் சார்பானவர்களென்ற உண்மை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் முழுவதுமாக அழிக்கப்பட்டதன் பின்னரே தெரியவந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கியுள்ளனர் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இத்தகையவர்களே படை வீரர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதி வந்தனர். எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் படைவீரர்களுக்கு கிடைத்ததும் தான் தாமதம் மேற்படி செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றவாளிகள் தேசத்துரோகிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுனெவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தியவரும் தற்போது அந்த இயக்கத்தின் தலைவராக முயலுபவருமான கே. பியை இன்டர்போல் தேடிவருகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலங்கை இராணுவம் 10 ஆயிரம் பேரைக் கொண்டிருக்கையிலேயே பிரபாகரன் இந்தியாவின் ஒத்துழைப்புடன் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை கட்டியெழுப்பினார்.
இப்போது எமது இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 3 இலட்சம் ஆகப்போகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை கே. பி. யினால் கட்டியெழுப்புவது எவ்வகையிலும் சாத்தியமாகாது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எமது உள்நாட்டில் வகுக்கப்பட்ட வியூகங்களைக் கொண்டே படையினர் இந்த வெற்றியை நிலைநாட்டினார். இந்நிலையில் கே. பி. இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டினால் அதனை தோற்கடிப்பதும் எமக்கு பெரிய வேலையாகாதென்பதை நினைவுபடுத்திக் கூறவிரும்புவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.
மோதல்களின்போது 195 இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 224 படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரம் படை வீரர்கள் ஊனமுற்றுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, படைவீரர்களால் 22 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 9 ஆயிரம் புலிகள் சரணடைந்திருப்பதாகவும் முதற்கட்டத்தின்போது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களும் இரண்டாம் கட்டத்தில் 80 ஆயிரம் சிவிலியன்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நிதிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலி இப்போது ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களைத் தேடி கைது செய்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும். பயங்கரவாத செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய குண்டுகள், தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
இவற்றைச் செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் மிகவும் அவசியம். அதனால் தற்போதைய சூழ் நிலையில் இவ்விரு சட்டங்களும் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் இவ்விரு சட்டங்களையும் நீக்குமாறு கோரியுள்ளார். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவர் விரும்புகிறார். அதற்கு ஒரு போதும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது.
நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தத்தை முன்னெடுத்தோம். இந்த யுத்தத்தில் புலிப் பயங்கரவாதிகளே தோற்கடிக்கப்பட்டுள் ளனர். இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. இடம்பெயர்ந்துள்ள மக்கள் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்.
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்
விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக
கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.