சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள்

காவல்துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • மாயா
    மாயா

    விதியை யாரால் வெல்ல முடியும். இவை முள்வேலிக்குள் உள்ள மக்களையும் சாதாரண மக்களையும் தொடர்ந்து பாதிப்படையவே செய்யும்.

    மக்களுக்காக போராடுவதென்பது ஒன்று. மக்களை அழிப்பதற்காக போராடுவதென்பது மற்றொன்று. அழிப்பதே உங்கள் தொழில் என்றால் அது அழிவால் மட்டுமே மாறும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தயாமோகனிடம் பிபிசி இறுதியாக “கிழக்கில் ஒளிந்திருக்கும் விடுதலைப்புலிகளை இராணுவம் தேடியழிக்க முற்பட்டால் என்ன செய்வீர்கள்” எனக் கேட்டபோது, தயாமோகன் “எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், தற்பாதுகாப்பிற்காகவும் தற்கொலை மேற்கொள்வோம்” என்று பதிலளித்தார். இதிலிருந்தே தெரிகின்றது இவர்கள் நிறையவே குளம்பிப் போயுள்ளார்கள் என்று. ஒன்று இவர்கள் ஆயுதங்களைக் கையளித்து சரணடைய வேண்டும், இல்லையேல் தலைவர் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசித்த குப்பியைக் கையாள வேண்டும்.

    Reply
  • pirasanna
    pirasanna

    தலைவர் மாதிரி சேறு பூசித்தான் சாக வேண்டும் என்றால் யாரால் தான் மாற்ற முடியும் அரோகர தயா மோகன்.

    Reply
  • rohan
    rohan

    //தலைவர் மாதிரி சேறு பூசித்தான் சாக வேண்டும் என்றால் யாரால் தான் மாற்ற முடியும் அரோகர தயா மோகன்.//

    சரண் அடைந்தால் ஏதோ கலதாரியில் கொண்டு போய் வைக்கப் போகிறார்களா? இவர்கள் கருணாவா அல்லது பிள்ளையானா?

    தலையில் கோடாலி வெட்டுடன் செத்துப் போன ஒருவனைத் துகில் உரிந்து கும்மாளமிடுகிற கூட்டத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்களா? பிரபாகரனின் சீருடையை கழற்றிவிட்டு ஏன் இவர்கள் சேறு அப்பியிருக்கிறார்கள்? முட்டாள்கள் நம்புவர் என நம்பி முட்டாள்கள் போட்ட பம்மாத்துக்கு நீங்கள் வேண்டுமானால் எடுபடுங்கள். மற்றவர்களை ஏன் உள்ளே இழுக்க முயல்கிறீர்கள்?

    Reply
  • thevi
    thevi

    சேறு பூசி கொளபீனத்தோடாவது விட்டார்கள். இனி அதையும கழற்றி விட்டு விடுவார்கள். எவ்வளவோ மரியாதையுடன் இந்த பிரச்சனையை கெளரவமாக முடித்து வைத்திருக்கலாம். புலிகளின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.

    Reply