Multiple Page/Post

இடம்பெயர்ந்தோர் குறித்து இன்று சபையில் விவாதம்

26parliament.jpgவடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக இன்று  புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பான இந்த விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி.யினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணி தொடக்கம் மாலை 4.30 பணி வரையான 4 மணி நேரத்துக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்கள் முன்னிலை; டில்சான் காயம்

srilanka-cri.jpgஇரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. பந்து வீச்சில் ஹேரத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி இலங்கை அணியை விட 82 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முன்னதாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 299 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி கொழும்பில் நேற்று முன்தினம் துவங்கிய 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் குர்ரம் மன்சூர் (93), முகமது யூசுப் (90) ஆகியோரின் சிறப்பான பங்களிப் பால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 299 ஓட்டங்களில் சுருண்டது.  தினேஷ் கனேரியா ஒரு ஓட்டத்துடனும், சயீத் அஜ்மல் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் துவக்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே துவக்க வீரர் வர்னபுரவை இழந்தது. உமர் குல் வீசிய பந்தில் வர்னபுர போல்ட் ஆனார். இதையடுத்து அணித்தலைவர் சங்கக்கார, துவக்க வீரர் பரனவிதானவுடன் இணைந்தார். இதில் பரனவிதான 5 ஓட்டங்கள் எடுத்திருந்த போது யூனிஸ் கான் வீசிய நேர்த்தியான இன்ஸ்விங் பந்தில் போல்ட் ஆனார்.

இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்களு க்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் சங்கக்கார 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்ட மிழந்தார். ஜயவர்த்தன 79 ஓட்டங்களையும் எடுத்தார். டில்சான் 44 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

இதேவேளை பந்து வீச்சில் தினேஷ் கனேரியா 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணி முதல் இன்னிங்சை 233 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த அடித்தளமிட்டார். அஜ்மல் 3 விக்கெட்டையும், குல், யூனுஸ்கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் திலகரத்ன டில்சான் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குமார் சங்கக்கார விக்கெட்காப்பாளராக செயல்பட்டார். டில்சான் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கன்னப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

PAKISTAN 1ST INNINGS (overnight 289-7):
Khurram Manzoor c Jayawardene b Vaas  93
Fawad Alam c Dilshan b Thushara  16
Younus Khan b Thushara     2
Mohammad Yousuf run out   90
Misbah-ul Haq c Dilshan b Kulasekera  27
Shoaib Malik lbw b Thushara   45
Kamran Akmal b Thushara    1
Umar Gul b Kulasekera     2
Danish Kaneria lbw b Kulasekera   1
Mohammad Aamer not out     2
Saeed Ajmal b Thushara     8
Extras: (b10, nb2)    12
Total (all out, 89.4 overs)   299

Fall of wickets: 1-34 (Alam), 2-36 (Younus), 3-203 (Manzoor), 4-210
(Yousuf), 5-285 (Malik), 6-285 (Misbah), 7-287 (Gul), 8-289 (Kaneria),
9-289 (Akmal), 10-299 (Ajmal).

Bowling: Vaas 20-6-43-1,
  Kulasekera 16-2-47-3,
  Thushara 20.4-2-83-5 (nb2),
  Herath 23-4-76-0,
  Mathews 8-2-31-0,
  Jayawardene 2-0-9-0.

SRI LANKA 1ST INNINGS:
M. Warnapura b Gul     0
T. Paranavitana b Younus    5
K. Sangakkara lbw b Ajmal   45
M. Jayawardene b Kaneria   79
T. Samaraweera b Ajmal     6
A. Mathews c Misbah b Kaneria   31
C. Vaas lbw b Kaneria     4
T. Dilshan c Akmal b Kaneria   44
N. Kulasekera c Misbah b Ajmal     1
R. Herath lbw b Kaneria    7
T. Thushara not out     5
Extras: (lb2, nb4)     6
Total (all out, 68.3 overs)   233

Fall of wickets: 1-0 (Warnapura), 2-23 (Paranavitana), 3-63 (Sangakkara),
4-82 (Samaraweera), 5-153 (Mathews), 6-171 (Vaas), 7-174 (Jayawardene),
8-181 (Kulasekera), 9-204 (Herath), 10-233 (Dilshan).

Bowling: Gul 10-0-55-1 (nb4),
  Aamer 10-2-34-0,
  Younus 3-1-10-1,
  Ajmal 25-5-70-3,
  Kaneria 20.3-3-62-5.

PAKISTAN 2ND INNINGS:
Khurram Manzoor b Herath    2
Fawad Alam not out     14
Younus Khan not out     0
Extras:  0
Total (for 1 wkt, nine overs)   16

Fall of wicket: 1-16 (Manzoor)

Bowling: Kulasekera 4-2-4-0,
  Thushara 4-1-7-0,
  Herath 1-0-5-1

சிறுபான்மை என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgநாட்டில் இனி சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் அதனை நிரூபித்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நம் அனைவருக்குமான இத்தாய் நாட்டைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை பெல வத்தையில் நேற்று மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையை சகல சமயங்களும் உணரத்தொடங்கியுள்ள காலமிது. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை. அதனை நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையில் தமிழும் சிங்களமும் அரச மொழியாக இருந்த போதிலும் தமிழ் மக்கள் தமது மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்ததாலேயே பல பிரச்சினைகள் உக்கிரமடைந்தன.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக நாம் 2500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அவர்களில் 500 பேருக்கு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவையில் தமிழும் சிங்களமும் தெரிந்தவர்களுக்கு 25,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகள் தீரும்.

மலையக மக்கள் இன்று கல்வியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் இது விடயத்தில் அக்கறையில்லாமல் இருந்ததற்குக் காரணம் ஆசிரியர் பற்றாக்குறையும் அரசபணிகளில் நிலவிய வசதியின்மையுமே. இதனைக் கருத்திற் கொண்டு நாம் 3,679 ஆசிரியர்களை நியமித்தோம், அத்துடன் அப்பகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆசிரியர்களை அப்பகுதியிலிருந்தே தேர்ந்தெடுத்தமை இதில் குறிப்பிடக் கூடியதொரு விடயம். அதனால் பெருந்தோட்டப் பகுதியில் பாரிய மாற்றமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இது நாம் மலையக மக்களுக்காகச் செய்த சேவையாகும்.

இன்று எல்லைக் கிராமங்கள் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. அன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அதே அபிவிருத்தி இன்று கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என எந்த பாகுபாடுமில்லாமல் சகலருக்கும் அரசாங்கம் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கின்றது. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மலையகப் பகுதிகளைப் பொறுத்த வரை வெள்ளைக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயன் காம்பிராக்களிலிருந்து அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது திட்டம். இத்திட்டத்தின் மூலம் தற்போது 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லயன் காம்பிரா சூழல் மாற்றம் பெற்று கிராமங்கள் உருவெடுக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். மூதூரிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களை நாம் 45 மணித்தியாலத்தில் மீளக்குடியமர்த்தி வாக்குறுதியை நிறைவேற்றினோம். முழு உலகிலிருந்தும் அழுத்தம் வந்த போதும் நாம் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினோம். சிறுபான்மை என்பதை வரலாற்றில் மட்டுமன்றி அனைத்திலிருந்தும் அகற்றுவது அவசியம். இன்று எமது அரசாங்கத்தில் பல தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை நம்புகின்றனர். இந்த அரசு சகல மக்களுக்குமான நம்பிக்கையான அரசு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எந்த இனம், நிலம், பிரதேசம் பேதமும் காட்டுவதில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

இது நாம் பிறந்த நாடு. நம் அனைவரதும் தாய் நாடு. இந்த நாட்டை சகலரும் அன்பு செய்ய வேண்டும். இதை பாதுகாக்க சகலரதும் ஒத்துழைப்பு மிகவும்அவசியமானது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தபாலில் அனுப்பப்படும் தந்திச் செய்திகள்

தம்புள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொது மக்களால் கையளிக்கப்படும் தந்திச் செய்திகள் யாவும் சாதாரண தபாலிலேயே அனுப்பப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாத்தளை மாவட்ட தபால் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில்;

அஞ்சல் அலுவலக தந்திச் சேவகர்களாகக் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் வேறு அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை பிரதேசத்தில் அதிகரித்திருப்பதாலும் தந்திச் சேவைகள் நட்டத்தில் இயங்குவதால் இத்தகைய தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

தந்திச் செய்திகள் தபாலில் அனுப்பப்படுவதால் கிராமப்புற மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சீரான தந்திச் சேவையைப் பெற்றுத் தருமாறும் மக்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்

‘மூன்றரை லட்சம் ஸ்வாத் மக்கள் இருப்பிடம் திரும்பினர்’

200709.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் குறைந்தது மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாக அரசாஙங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்துக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய முகாம்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஏனைய முகாம்களில் இருப்பதாகவும், தொடரும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அவர்கள் தமது இருப்பிடம் திரும்ப மறுத்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வாத் பிராந்தியத்தில் அண்மையில் அரசாங்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் காரணமாக இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

“ஏ9′ வீதியிலுள்ள கோயில்களைத் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

ஏ9 வீதியிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்த பூஜைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சர்வதேச இந்து மதபீடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்து மத பீடத்தின் செயலாளர் ஆர்.பாபு சர்மா இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்தம் ஒருவேளை பூஜையையாவது நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாட்டை எமது மதபீடம் மேற்கொள்ளும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உட்பட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து பூஜை, வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். வவுனியா முகாம்களிலுள்ள இந்து குருமாரை பூஜைகளில் ஈடுபடுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னித் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

kamal.jpgவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார்.

அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தமது அலுவலகத்திற்கு சென்று புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரட்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கள முனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கிவந்தார்.

நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று கள நடவடிக்கைகளுக்குப் பாரிய ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளார்

பிரிட்டனில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் போலி கடவுச்சீட்டுகளுடன் கைது

பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர் போலிக் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிவபாலன் துரை என்ற இலங்கையர் பார்க் றோயல் பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலியான பிரெஞ்சு கடவுச்சீட்டு, 2 போலி தேசிய காப்புறுதி அட்டைகள், 2 பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப் பத்திரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட சிவபாலன் துரையுடன் மற்றொரு புகலிடம் மறுக்கப்பட்டவரான சக்திவேல் சஞ்ஜீவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்ணாடி தயாரிப்பு பணியாளர்கள் இருவருடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்றைய இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலை வழங்கிய சுப்பர் ரவ்கீறெட் கிளாஸ் நிறுவனம் 40,000 ஸ்ரேர்லிங் பவுண்ஸ் வரையிலான அபராதத்தை இப்போது எதிர்நோக்கியுள்ளது.

இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் முகாமைத்துவ இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த உதவி 20 மாதங்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 24 ஆம் திகதி நடக்கவுள்ள நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இந்த பொருளாதார உதவித்திட்டம் குறித்து ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், அந்த திட்டத்தை நிறைவேற்று சபை அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் மூலம் இலங்கை உடனடியாக 313 மில்லியன் டாலர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் அலுவலகங்களில் தேடப்படுகின்றனர்

இராணுவத்திலிருந்து தப்பியோடி தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும் படையினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி தற்போது தனியார் அலுவலகங்களில் கடமையாற்றுவோரில் 150 பேரது விபரங்களைப் பெறும் நோக்கில் நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி 150 பேரதும் முகவரி மற்றும் விபரங்களை வழங்குமாறு தொழில் ஆணையாளருக்கு உத்தரவிடக்கோரியே பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

தொழில் திணைக்களம் ஊடாக இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதல் 150 பேரது விபரங்களைத் தொழில் திணைக்களத்திடமிருந்து பெறுவதற்காக நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.