இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் முகாமைத்துவ இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த உதவி 20 மாதங்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை 24 ஆம் திகதி நடக்கவுள்ள நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இந்த பொருளாதார உதவித்திட்டம் குறித்து ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், அந்த திட்டத்தை நிறைவேற்று சபை அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் மூலம் இலங்கை உடனடியாக 313 மில்லியன் டாலர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.