May

May

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயளாலர் சனத் நந்தீத சமீபத்தில் எழுத்து மூலம் அறிவிப்பை அனுப்பியுள்ளார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை தவிர மற்றைய 04 ஜனாதிபதிகளின் வாகனங்களான மஹிந்த – லாண்ட் ரோவர் V8, மைத்ரி – லெக்ஸ்ஸஸ் டிபன்டெர், கோட்டா – லாண்ட் ரோவர் ஜீப், ரணில் – லாண்ட் ரோவர் ப்ராடோ ஆகியவை இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்த அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை இலங்கை கல்வி செயற்பாடுகளுக்கு நிதியாக ஒதுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்க நிபந்தனைகள் விதிக்க கோரும் எம்பி மனோ கணேசன்!

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்க நிபந்தனைகள் விதிக்க கோரும் எம்பி மனோ கணேசன்!

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் எம்பி மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணியின் குழுவினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சமூகத்தின்பால் நம்பிக்கையிழந்த தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையான ஐரோப்பிய ஒன்றியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைப்பதாக மனோ கணேசன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

அந்த வகையில் பயங்காரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இடைநிறுத்துதல், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பித்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் பொறுப்புக் கூறல், தண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவித்தல் மற்றும் நவீன அடிமைத்துவ அம்சங்களை கொண்ட மலையகத் தமிழர் சமூகத்துக்குள் வரும் ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் போன்ற கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனோ குழுவினர் மகஜராக கையளித்துள்ளனர். அதேநேரம் இக்கோரிக்கைகளை இலங்கைக்கு நிபந்தனைகளாக விதிக்க வேண்டும் என்றும் கோட்டுக் கொண்டனர். இலங்கை இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டாலே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் மனோ குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியக் குழு !

ஜி.எஸ்.பி. பிளஸ் பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியக் குழு !

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கும் இடையில் நேற்றைய தினம் ஏப்பிரல் 30 ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என நம்பிக்கையாக தெரிவித்தார். மேலும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான நீண்டகால நட்புற வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது. இவ்வர்த்தக வெற்றிகளை இலங்கை பெற தாம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும் என்றும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார். அதேநேரம் அஜனாதிபதியும் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்தகால ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண் விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இப்போது நாடு சரியான நிர்வாகத்தின் கீழ் மாறி வருவதாகவும் நிலமைகள் முழுமையாக சரியாக சிறிது காலவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முக்கியமாக நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் என அனைத்து பிரதேச மக்களும் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி விரைவில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம். தமிழ்க் கட்சிகளை முழுமையாக புறக்கணியுங்கள். ஏற்கனவே 50 வீதம் கழுவித் தள்ளி விட்டீர்கள். மிகுதி 50 வீதத்தையும் கழுவித் துடையுங்கள் என யாழ் ஊடக மையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தொழிலதிபர் விண்ணன் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் சமயத்திலும் விண்ணன் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி என்பிபி கட்சிக்கு வாக்களிக்கும்படி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நேற்றைய தினமான ஏப்பிரல் 30 இல் ஊடகவியலாளர்களை சந்தித்த விண்ணன் என்பிபி கட்சிக்காக வெளிப்படையாக வாக்குச் சேகரித்தார். ஊடகவியலாளர்கள் தையிட்டு விகாரை, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களில் கேட்ட கேள்விகளுக்கும் அசராது பதிலளித்தார்.

தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடியை பூர்வீகமாக கொண்ட தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் திரைப்பட படப்பிடிப்பு தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் பெற்றோர் இங்கிலாந்து புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ஜெய் ஆகாஷ் லண்டனிலேயே கல்வி கற்றவர். திரைப்படம் மீதான ஈர்ப்பினால் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ரோஜாவனம் படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் ஜெய் ஆகாஷ் தன்னுடைய பிறந்த ஊரை மறக்காது முன்னரும் பலதடவை தாவடிக்கு வந்து ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருவிழாக்களில் கலந்து சிறப்பித்துள்ளார். குறிப்பாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் சப்பரத்திருவிழா ஜெய் ஆகாஷ் குடும்பத்தினரின் உபயத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது. ஜெய் ஆகாஷ் தான் நடிக்கும் என்னுயிர் படத்தின் பாடல் காட்சியை தான் பிறந்த மண்ணில் தன்னுடைய குல தெய்வம் கோயிலில் படம் படிக்க விரும்பி, கோடியேற்ற தினத்தில் அதனை நிகழ்த்துவதாகவும் ஏ வன் ட்றவலிங் (A one Traveling) என்ற யுரீயூப் சனலுக்கு கோயில் முன்றலில் வைத்து விளக்கமளித்துள்ளார்.

அதேநேரம் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஜெய் ஆகாஷின் திரைப்பட பாடல்க்காட்சி படப்பிடிப்பை தனது போலி முகநூலில் பகிர்ந்து, அப்பாடல் காட்சியில் தோன்றும் பெண் நடனக் கலைஞர்களை அவதூறாக சித்தரித்து எழுதியுள்ளது. ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் பதிவிற்கு பல அறிவிலிகள் தம்முடைய பங்கிற்கும் மோசமான கருத்துக்களை பின்னூட்டலாக இட்டுள்ளார்கள். பெண்களுக்கு எதிரான இணைய வன்முறையை தேசம் நெற் தொடர்ந்து வெளிப்படுத்தியும் கண்டித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.