2024

2024

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை – ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.

இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது.

காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர்.

அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.

 

அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது.

கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

 

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி – அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்படும் செய்யப்படும் வங்கி உயர் அதிகாரிகள்!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி அதிகாரிகள் பலர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க  தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் காரணமாக தாம் அது குறித்து பேசுவது பொருத்தமற்றது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளிடம் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற 2025இன் ஆரம்பத்தில்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் தி ணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இரண்டு வாரங்களுக்குள் அரச பங்களாக்களை அரசிடம் கையளிக்க முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு.

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அரச பங்களாக்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

அரசாங்க பங்களாக்களை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே அவற்றை கையளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்களுக்கு, அரசாங்க பங்களாக்களை மீள கையளிப்பதில் பெரும் பின்னடைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 07 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பங்களாக்களின் எண்ணிக்கை 40 ஆகும், அதன்படி இதுவரை கையளிக்கப்படாத பங்களாக்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

இதேவேளை, அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவது மற்றும் செலவினங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சகல அம்சங்களையும் மீளாய்வு செய்வதிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம் !

ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும்.

 

அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர்.

 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு உக்ரேனுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பியதாக குற்றம் சாட்டியது.

 

உக்ரேனுக்கு எதிரான தனது போருக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய பின்னர், தெஹ்ரான் மீதான பொருளாதாரத் தடைகளை பரிசீலிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் கூறியது.

 

குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது, மொஸ்கோ அதற்கு மறுப்பு வெளியிடவில்லை. மாறாக தெஹ்ரானுடன் வளர்ந்து வரும் உறவு குறித்த கருத்தினை வெளியிட்டிருந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்கியுள்ளது.

 

எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விநியோகம் உக்ரேன் – ரஷ்ய மோதலில் ஈரானின் ஆழ்ந்த ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது.

மூன்று நாட்களுக்குள் உயிர்த்த ஞாயிறு பற்றிய அறிக்கையை கம்மன்பில கையளிக்க விட்டால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் உள்ளதாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் வழங்க 03 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் கம்மன்பிலவிடம் உள்ளதாக கூறப்படும் ம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவ்வாறு வழங்காமல் குறித்த அரிக்கைகளை தன்வசம் வைத்திருப்பது தண்டனைக்குறிய குற்றம் எனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் !

தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – புத்தி ஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் திரு அருள் கோகிலனுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்

 

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு உத்தரவு !

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம், 2006 இல் கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம், தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மாத்தறை வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம் உகாண்டாவில் மறைத்து வைத்த பணத்தை இலங்கைக்கு மீட்டு வர நடவடிக்கை!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி  தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, உகண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற, சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டிய பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.

நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்கவினால்  அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

 

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் – உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா !

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்  உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.

ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தியிருப்பது நிதித் துறையில் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியது. மேலும், தேசியப் பொருளாதாரத்தில் விவசாயத் துறை குறைந்த பிரதிநிதித்துவத்தைக் காட்டுவதும் இதற்கு காரணமாகிறது.

 

ஆசிய வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விவசாய உற்பத்தித் திறன் மோசமான நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் சிறிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை தமது பிரதான வருமான வழியாக கருதவில்லை எனவும் ஜனாதிபதி எடுத்துக்காட்டினார் . இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பேரம் பேசும் சக்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த உதவியாக உள்ள விவசாய சங்கங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.