2024

2024

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,399 வாக்குகள்

வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) – 639

காலி மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,196 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,536 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,075 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,047 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 1,123 வாக்குகள்

 

 

திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 9,705 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,853 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,749 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 382 வாக்குகள்

கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 28,475 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,985 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,814 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 934 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) – 728 வாக்குகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 17,326 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,623 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,293 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 774 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) – 188 வாக்குகள்

களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 29,076 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,340 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,913 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,160 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) – 613 வாக்குகள்

வெளியானது முதலாவது தேர்தல் முடிவு – என்.பி.பி முன்னிலையில்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்காத இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்!

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களில் 36087 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலில் 397041 பேர் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 593187 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 360,954 பேர் வாக்களித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

 

தேசியப்பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றம் செல்ல 500க்கும் அதிகமானோர் காத்திருப்பு !

தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கான போட்டியில் 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

2024ம் ஆண்டு்க்கான நாடாளுமன்றத் தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கவுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

27 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் தங்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதன் பிரகாரம் அரசியல் கட்சிகளின் மூலமாக தேசியப்பட்டியல் நியமனத்துக்காக 516 பேரின் பெயர்களும், இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மூலம் 11 பேரின் பெயர்களும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அருணலு ஜனதா பெரமுண, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் குரல், ஜனஅரகல கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஜனசெத பெரமுண, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, இரண்டாம் தலைமுறை, தேசப்பிரேமி ஜனபலவேகய, புதிய ஜனநாயக முன்னணியும் நிதஹஸ் ஜனதா பெரமுண, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, லிபரல் ஜனநாயக கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண, இலங்கை சமாஜவாதி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேசியப் பட்டியல் அபேட்சகர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதற்கடுத்ததாக அநுராதபுரம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேசியப் பட்டியல் அபேட்சகர்களுக்கான பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த தேசியப் பட்டியல் தொழில்நுட்ப காரணிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்..? – தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல் !

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் தேர்தல் ஆணைக்குழுவில் அவை மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

குறிப்பாக மூன்று தடவைகள் இந்த முறைமைகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

முதலில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படும்.

 

அதன்பிறகு, மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும், அதனுடன், ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களிலும் விருப்பு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

 

எவ்வாறாயினும், ஆசனங்களை வென்ற அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வாக்குகளே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் மண்டப வளாகத்தில் இருந்து வௌியேற்றப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.