21

21

ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 13 இலிருந்து 16 ஆக அதிகரிப்பு !

ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 13 இலிருந்து 16 ஆக அதிகரிப்பதற்கு அந்நாட்டு நீதியமைச்சு நியமித்த குழுவொன்று சிபாரிசு செய்துள்ளது.

பாலியல் வல்லுறவுகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான அதிகபட்ச கால எல்லையும் 10 இலிருந்து 15 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஜி7 நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஜப்பானிலேயே பாலியல் உறவுக்கான சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது மிகவும் குறைவாக உள்ளது.

ஜேர்மனி, இத்தாலியில் இது 14 வயதாகவும், பிரான்ஸில் 15 ஆகவும், பிரிட்டன், அமெரிக்காவில் 16 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் ஜப்பானிலும் குறைந்தபட்ச வயதை 16 ஆக அதிகரிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் தற்போதுள்ள சட்டங்களின்படி, வல்லுறவு சம்பவங்களின்போது வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இருந்தது என்பதையும் தடுப்பது சாத்தியமற்றதாக இருந்தது என்பதையும் பாதிக்கப்பட்டவர்கள் நிரூபித்தாலேயே குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளியாக்கப்பட முடியும். இது தொடர்பான சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஜப்பானில் பாலியல் வன்முறை சந்தேக நபர்கள் வழக்குகளில் விடுவிக்கப்படுவது அதிகரித்ததால், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்யக்கோரி 2019 ஆம் ஆண்டு பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன

அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா !

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா,  ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2021ல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார். ரஷ்யா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை.

அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷ்யா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புடின் பேசினார். போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஷ்ய போரால் 19,000 பொதுமக்கள் பாதிப்பு !

உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர்.

கனரக பீரங்கிகளின் ஷெல் தாக்குதல்கள், பல ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் உட்பட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதே நேரம இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் சர்வதேச அரசியலாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது.