தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக சிறிலங்கப் படைகள் வென்றுவிட்டதாக சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
May
May
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோரை சுட்டு கொன்று இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பில் கொரில்லா தாக்குதல் நடத்தலாம், அதற்கான அபாயம் அதிகமிருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது.
இதனால் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது
சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் திகதி உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்” என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.
2009 “Museums and tourism”
2008 “Museums as agents of social change and development”
2007 “Museums and Universal Heritage”
2006 “Museums and young people”
2005 “Museums bridging cultures”
2004 “Museums and Intangible Heritage”
2003 “Museums and Friends”
2002 “Museums and Globalisation”
2001 “Museums: building community”
2000 “Museums for Peace and Harmony in Society”
1999 “Pleasures of discovery”
1998-1997 “The fight against illicit traffic of cultural property”
1996 “Collecting today for tomorrow”
1995 “Response and responsibility”
1994 “Behind the Scenes in Museums”
1993 “Museums and Indigenous Peoples”
1992 “Museums and Environment”
சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.
http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0518-international-museum-day.html
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போர் முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரன் பற்றிய தகவல்களால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வியாசர்பாடியில் அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
இந்த சம்பவங்களால் சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னையில் 110 பேரை இணை கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மத்திய சென்னை இணை கமிஷனர் ரவிகுமார் 72 பேரை கைது செய்தார். சென்னை முழுவதும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ‘’இலங்கை பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்க வில்லை என்று கூறுவது தவறு. அங்கு தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அறிந்த தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் வென்று விட்டதாக ராஜபக்சே எண்ணலாம். ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே கிடையாது. வேறுவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கும்’’ என்று தெரிவித்தார்.
மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம் உடன் பிறப்புக்கள் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு வன்னி மண்ணில் மனிதப் பேரவலத்தில் அழிவின் விழிம்பில் வீழ்ந்து கிடப்பதை அறிவீர்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கிடையில் பெருமளவான எம்மின மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும், ஏவுகணைகள், எறிகணைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகி மாண்டுவிட்டனர். இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகிக் குற்றுயிராய்க் கிடக்கின்றனர். பல இலட்சம் மக்கள் பலவந்தமாக இடம்பெயர வைக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.
எம் தமிழ் பெண்கள் படுங்கொடுமைகளும் அவமானங்களும் சொல்லில் அடங்கா. இக்கொடிய நிலை தொடர்கின்றது. இது நாம் சொல்வது மட்டுமல்ல, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வெளியீடுமாகும். உழைத்து வாழ்ந்த எம் மக்கள் இன்று உணவின்றி மருந்தின்றி ஓடாகிச் செத்து மடிகின்றனர். எஞ்சியோர் ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கையேந்தி நிற்கும் நிலை நீடிக்கிறது.
எங்கள் உழைப்பும் வரிப்பணமும் எம் தேசத்தையும், எம் மக்களையும் அரசியல் அடிமைகளாய் வைத்திடவும் அல்லது பூண்டோடு அழித்திடவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு இறுமாப்பைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச சமூகமே போரை நிறுத்தி விட்டுத் தமிழர் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். தமிழர் தம்மை ஆளும் அரசியல் உரிமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பொழுதும் இலங்கை அரசு அதிகார ஆணவத்துடன் எம் தமிழ் இனத்தை அழித்து விட்டு, தமிழ் நிலத்தையெல்லாம் ஆக்கிரமித்துப் பௌத்த சிங்களக் கொடியைப் பறக்கவிடக் கங்கணங்கட்டி நிற்கிறது.
ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் பின்னரும் அரசியல் தீர்வுமின்றி உயிர் வாழும் உரிமையுமின்றி துடிதுடித்துச் சாகின்றார்கள். நாம் மட்டுமல்ல நாடே சீரழிக்கப்படுகின்றது. இத்தனை காலமும் எம் மக்கள் எத்தனை பெரிய அளப்பரிய தியாகங்களை செய்து விட்டார்கள். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இப்பயிரை கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?” எனச் செக்கிழுத்த சிதம்பரனார் பாரத விடுதலைக்காகச் சிறைக்குள் வீழ்ந்து கிடந்த போது பாரதியார் பாடிய திருவடிகள்தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு கொள்கைக்காக தமிழின விடுதலை என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாய் அலைந்து நிற்கின்றனர். அவர் தம் உறவுகள் அடிமைகளாய் சிறைக்கூடத்தினும் கொடிய அடக்குமுறைக் கூடாரங்களுள் வீழ்ந்து கிடக்கின்றனர். ஹிட்லர் காலத்து யூதச் சிறைக் கூடங்கள் போல இராணுவக் காவலும், காட்டிக் கொடுத்துப் பிழைப்போர் கூட்டங்களும் சூழ்ந்து நிற்கின்றனர்.
கையில் காசுமின்றி நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி உடுக்க மாற்றுத் துணியுமின்றிப் பட்டினியால் சாகும் எம் தமிழ் உறவுகளைக் காத்து நிற்கும் பொறுப்பு எமக்கு உண்டு. உங்கள் எதிர்கால வாழ்வுக்கும் விடிவுக்குமாக இராஜ தந்திர வழிகளில் சர்வதேச சமூகத்திடம் உதவி கேட்டு வருகிறோம்.
புலம்பெயர்ந்த எம் தமிழர் உதவிக் கரம் நீட்டி நிற்பதறிவோம்.
எம்மினத்தைக் கொன்று குவிப்பவர்களே உலகத்திடம் தமக்கு உதவி கேட்டு நிற்கின்றார்கள் எதற்காக? உங்கள் சொந்த இரத்த உறவுகளோ, நாங்களே தானும் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்குக்கூட அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு நாஸிசம் நாட்டில் பரவியுள்ளது.
எனவேதான் நாமெல்லாம் எம் மண்ணில் இராணுவமயச் சூழலில், திறந்த வெளி சிறைக் கைதிகளாய் இருந்தாலும், எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில் ஒரு பிடியையேனும் அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளுக்கு உதவி உயிர் கொடுப்போம். எம் தமிழ் மக்கள் விடிவுக்காக நாளும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்
ஜப்பானில் மேலும் 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜப்பானில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒசாகா மற்றும் ஹியோகா பிராந்தியங்களை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள், இவர்களில் ஒருவர் கூட நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
ஜப்பானில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட நால்வருக்கு வட அமெரிக்காவில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றியது., மற்றவர்கள் அனைவருக்கும் ஜப்பானுக்கு உள்ளாகவே தொற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா ரோமன் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகையில், கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு சட்டரீதியான உரிமை இருப்பது சரிதான் என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒருவர் மற்றவருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் வவுனியா செல்லவுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களுடன் இக்குழுவினர் செல்லவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர கல்வி அமைச்சினூடாக அவசரகாலக் கல்வியை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதிக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய வடக்கில் யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்களில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவர். அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ்விடம்பெயர்வினால் பாதிப்படைந்துள்ளது.