May

May

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் குடும்பத்தினரும் உயிரிழந்து உள்ளனர்! – எஸ் பத்மநாதன் த வி பு

LTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

அழகிரி, தயாநிதி, ராஜாவுக்கு கேபினட் – டி.ஆர். பாலு துணை சபாநாயகர்?

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் லோக்சபா துணை சபாநாயகராக நியமிக்கப்படலாம்.

திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது. மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்

udaya_nanayakkara_brigediars.jpg விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர்.  வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.

அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார். தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர்.  புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்குலக நாடுகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரணை செய்துவிட்டு இலங்கை விடயங்கள் தொடர்பாக பேசவாருங்கள்

gotabaya1.jpgஇலங்கை இராணுவ வெற்றியின் பின்னால், போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பாக மேற்குலக நாடுகள் ஆராய இருக்கின்றன எனவும் என்.டி.வி நிருபர் நிட்டன் கோக்லி பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடனான நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

உலகில் எல்லா நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடும் போது இலங்கை இராணுவம் ஆரம்பத்திலிருந்து இறுதிரை பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மிகவும் சாதுர்யமான முறையில் அம்மக்களை காப்பாற்றியே இந்த வெற்றியை அடைந்துள்ளது என தெரிவித்த அவர் ஜக்கிய நாடுகள், மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழு என்பன இலங்கை இராணுவம் தொடர்பான போர் குற்றங்களை ஆராய முன்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் போர் குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து விட்டே இலங்கை விடயம் தொடர்பாக பேச வேண்டும் என தெரிவித்தார்.

ஏ-9 பாதையை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி- அமைச்சர் பீ.பீ.ஏக்கநாயக்க

a9-road.jpgயாழ். கண்டி ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். பாதையைத் திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி இருப்பதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்ததாவது, ஏ ஒன்பது நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு விட்டது. தற்போது இராணுவ வாகனங்களும் உணவு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளும் இப்பாதை வழியாக பயணிக்கின்றன.

யாழ். குடாநாட்டு மக்கள், இப்பாதை மூடப்பட்டிருப்பதால் கடந்த பல வருடங்களாக பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக தென்பகுதிக்கு வருவோர் கப்பலையும் விமானத்தையும் நம்பி பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உள்ளது.  இம் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பாதையை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதை புனரமைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கிடைத்தவுடன் பாதை திறக்கப்படும் எனத் தெரிவித்தார். 

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும் – வீரகேசரி வாரவெளியீடு

idps200_1.jpgஇலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் “ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, “இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.

“”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்” என்று நோர்வே கூறியுள்ளது. “”இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது.

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்

varatharaja.gifஇலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.

யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் சரி இல்லாததால் தோற்று விட்டோம்: டோனி

ipl-2009-01.jpgஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
 
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:   நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
 
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.

மன்மோகனுடன் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து – தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

pm-manmogan.jpg2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

எங்களது அமைதி சரணடைவதற்கு அல்ல – விடுதலைப் புலிகள்

எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுதியில் தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கையை புலிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து யாழ் குடா பகுதிக்கான புலிகள் படைப் பிரிவின் தளபதியான வெற்றிக்குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.

எங்களது இயக்கப் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள். ராணுவம் இன்று பெரும் உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதகாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று அவர் கூறியுள்ளார்.