Multiple Page/Post

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் நிறுவனம் உதவி

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் ஜொனிட்டர் சர்வதேச உதவி நிறுவனம் 6.45 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியவசியப் பொருட்களை வழங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட இந்த அத்தியவசியப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஈ.என். ராஜா தலைமையிலான குழுவினர் இப்பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பின்லாந்தில் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐநாவின் மாநாடு

finland.jpgஇலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதிவழங்குவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கல் நிறுவனங்களின் மாநாடு பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் 2ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்லாந்து தலைமை வகிப்பதோடு 2 பில்லியன் யூரோக்களையும் வழங்கியுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் அங்கத்துவ நாடுகளான 21 நிதிவழங்கல் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி திணைக்களமும் கலந்து கொள்கின்றன.

இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான உதவிச் செயலர் ஜோன் கோம்ஸ் பங்குபற்றவுள்ளார். இதன் போது பாகிஸ்தானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

நலன்புரி முகாம்களில் பிரிந்து வாழும் குடும்பங்களை இணைக்க நடவடிக்கை : அமைச்சர் ரிசாட் பதியூதீன்

rizad_baduradeen1.jpg யுத்தத்தினால் வன்னியிலிருந்து பல்வேறு கட்டங்களாக இடம்பெயர்ந்து வெவ்வேறு முகாம்களில் பிரிந்திருக்கும் குடும்பங்களை மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வீசா நடைமுறைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கபடமாட்டாது – அவுஸ்திரேலியா

australia.jpgஅவுஸ்திரேலியா தனது வீசா வழங்கும் நடைமுறைகளின் போது இலங்கைத் தமிழர்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் அகதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாதென அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்த சூழ்நிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்கும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.எனினும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இவ்வாறான விசேட சலுகைகளை வழங்கும் எவ்விதத் திட்டமும் இல்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும்

sri-lanka-parliament.jpgநீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தற்போது கருத்து வலுப்பெற்று வருவதாக கூறபப்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ( லண்டன்)பத்மினி சிதம்பரநாதன் ( லண்டன) செல்வராஜா கஜேந்திரன் ( ஐரோப்பிய நாடுகள் ) செல்வம் அடைக்கலநாதன் ( இந்தியா) ,எம்.கே. சிவாஜிலிங்கம் ( இந்தியா ) ஆகியோர் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தொடர்ந்தும் விடுமுறை நீடிக்கப்பட்ட நிலையில் இந் நாடுகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் அரசியல் ரீதியான செயல்பாடுகளை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் இவர்களை நாடு திரும்புமாறு கட்சி கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

13 ஆவது திருத்தச் சட்டத்தி்ன் கீழ் அரசியல் தீர்வுக்கு முயற்சி – டக்ளஸ் தேவானந்தா

douglas.jpgஇனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு, அதனை அரசியலமைப்பில் சேர்ப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்;புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது, இந்தத் திருத்தம் ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்றது. அத்துடன், இந்தியாவின் உதவியோடு கொண்டு வரப்பட்ட இந்தத்திருத்தச் சட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டு. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தி்ன் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இப்போதுள்ள ஒரேயொரு வழியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதும், அங்கு உள்ளுராட்சி சபைகள் மாகாண சபை என்பவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு. அங்கு சிவில் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகரட்னம் எம்.பியை கட்சி உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி

kanagaratnam.jpgகுற்றப் புலனாய்வுத்துறையினரால் 4 ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட இலங்கை தமிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தை அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கடந்த திங்கள் கிழமை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா பார்வையிட்டு அவருடன் உரையாடியுள்ளார். நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதனும் சென்று பார்வையிட்டதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

20 ஓவர் உலக போட்டி 216 நாடுகளில் ஒளிபரப்பு

second-world-cup-of-twenty20.jpg12 நாடுகள் பங்கேற்கும் 2 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜுன் 5 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்.நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி பல்வேறு டெலிவிஷன் சேனல்கள் மூலம் 216 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

செலசினேயின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக அனுஷ பெல்பிட்ட நியமனம்

directoinformation_.jpg அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட செலசினே தொலைக்காட்சியின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஊடகத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கடந்த 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

அதன்படி தற்போது வகித்துவரும் அரச தகவல் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு மேலதிகமாக அனுஷ பெல்பிட்டவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்,  இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் போன்ற பதவிகளையும்; அனுஷ பெல்பிட்ட இதற்கு முன்னர் வகித்துள்ளார்.  பட்டதாரியான அவர் தமது பட்டப்பின் படிப்பை அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுள்ளார்

யாழ்ப்பாணம் மன்னார் ஏ 32 வீதியைப் புனரமைக்க 4950 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ 32 வீதியைப் புனரமைக்க 4,950 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

வீதி  அபிவிருத்தி  அதிகார  சபையின்  கண்காணிப்பின்  கீழ் 10 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் நிர்மானப்பணிகளை  மேற்கொள்ள உடன்படிக்கையில்  கைச்சாத்திட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏ 32 வீதியை 6.2 மீட்டர் அகலம் கொண்டதாக 114.26 கிலோ மீட்டர் தூரத்துக்கு புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.