2020

2020

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது தடவையாக ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மும்பை – தொடரின் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் இதோ !

ஐ.பி.எல்2020 இன் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65ஓட்டங்கள்), ரிஷ்ப் பண்ட் (56ஓட்டங்கள்) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.
மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
பின்னர் 157 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 பந்துப்பாரிமாற்றங்களில் 45 ஓட்டங்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17.2ஆவது பந்துப்பரிமாற்றத்தில்  அன்ரிச் நோர்ஜே வீசிய பந்தில் ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது பந்துப்பரிமாற்றத்தில்  முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ஓட்டம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகள் இழப்பிற்கு 157  ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியும், அதிக இலக்குகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா  தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 இலக்குகள் வீழ்த்திய ரபாடா ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்.சி.பி)
ஃபேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)
கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

“இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன்” – கேன் வில்லியம்சன் கவலை !

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் கேன் வில்லியம்சனின் போராட்டத்தால் பெங்களுரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அணி வீரர்களான வார்னர் (2), பிரியம் கார்க் (17), மணிஷ் பாண்டே (21) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் வெற்றிக்காக போராடினார். ஆனால் 45 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 172 ரன்களே எடுத்து 17 ஓட்டங்களால் வெற்றியை கோட்டைவிட்டது. அத்துடன் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானம் என உணர்கிறேன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில்
‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் அவர்களுடைய ரிதத்தை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சிறப்பாக விளையாடினர்.
போட்டியின் 2-வது இன்னிங்சில் 190 ஓட்டங்கள் அடிப்பது கடினம். எங்களுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் மிடில் ஆர்டர் ஓவர்களில் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தோம். எங்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன். ஆனால், குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

ஐ.பி.எல்2020 வெற்றியாளர்கள் யார் ..? நாளை மும்பையுடன் மோதுகிறது டெல்லி !

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆந் திகதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்று 5ஆம் திகதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ஓட்டங்களால் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ஓட்டங்களால் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை 10ம் திகதி நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சைமும்பை அணி 6ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றது. 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. தற்போது மும்பை அணி 5ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப் போவது மும்பையா? டெல்லியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதே நேரத்தில் டெல்லி அணி மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும். இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், இஷான்கிஷன் (483ஓட்டங்கள் ), சூர்யகுமார் யாதவ் (461ஓட்டங்கள்), ஹர்த்திக் பாண்ட்யா (278ஓட்டங்கள்), போல்லார்ட் (259ஓட்டங்கள்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா (27 இலக்குகள்), போல்ட் (22இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 4 அரை சதத்துடன் 603 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ஓட்டங்கள்), ரிஷப் பண்ட் (287ஓட்டங்கள்), ஹெட்மயர் போன்ற சிறந்த துடுப்பாட்டவீரர்களும் , ரபடா (29 இலக்குகள்), நோர்கியா (20இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர். சகலதுறைவீரர் வரிசையில் ஸ்டோய்னிஸ் (352 ஓட்டங்கள், 12 இலக்குகள்) என சிறப்பான வீரர்களையும் கொண்டுள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 27 போட்டியில் மும்பை 15-ல் டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” – கவுதம் கம்பீர்

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப்பேட்டியில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது::-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு தலைமைத்துவம் என்பது என்பது ரொம்பவே அதிகம். பெங்களூர் அணி நிர்வாகம் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும். கோப்பையை வெல்லாமல் எந்த தலைவராவது, எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

Eight years is long time': Gautam Gambhir wants RCB to remove Virat Kohli  as skipper, Sports News | wionews.com

எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் தலைவர். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போது, தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி, ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தந்த அணிகளின் தலைவர்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. தலைவராக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.

‘நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி’ என்று நீங்கள் (பெங்களூர்) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது. டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை.
என  கம்பீர் அந்தப்பட்டியில் கூறினார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து நடால் சாதனை !

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால்(ஸ்பெயின்) இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.

‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெலிசியானோ லோப்சை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். 2002-ம் ஆண்டில் முதலாவது வெற்றியை பெற்ற நடால் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதுவரை 1,201 ஆட்டங்களில் ஆடியுள்ள நடால் அதில் 86 பட்டங்களுடன் ஆயிரம் வெற்றிகளும், 201 தோல்விகளும் கண்டுள்ளார்.

ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 4-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1274 வெற்றி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1242), அமெரிக்காவின் இவான் லென்டில் (1068) ஆகியோர் உள்ளனர்.

34 வயதான நடால் கூறுகையில், ‘இந்த ஆயிரமாவது வெற்றி எனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. இச்சாதனையை அடைவது எளிதல்ல. மிக நீண்ட காலம் சிறப்பாக விளையாடினால் மட்டுமே முடியும். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

“அடுத்த ஆண்டும் எம்.எஸ்.டோனி தான் சென்னையின் தலைவர்” – உறுதிப்படுத்தினார் சென்னை அணி உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் !

அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ் டோனி தான் தலைவராக வழிநடத்துவார் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு மோசமான ஆண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியை தவிர வேற யாரு... அவர்தான் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே கேப்டன்... ஸ்ரீனிவாசன் சொல்லிட்டாரு!

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலியை நினைவுபடுத்துவதாக பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ள கருத்தையும் ஸ்ரீனிவாசன் ஆமோதித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அந்த அணியின் தலைவர் டோனி எதிர்பார்க்கப்பட்டார். கடந்த ஒரு ஆண்டாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஐ.பி.எல்லில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை தன்னுடைய மோசமான ஆட்டத்தின்மூலம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் டோனி.

அந்த அணி இறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இறுதியாக நிலைபெற்றிருந்தது. ஆயினும் அந்த அணியின் தொடர் தோல்விகள் பிளே-ஆப் சுற்றிற்று அணி தகுதிபெறாததற்கு காரணமாக அமைந்தன. மோசமான ஆண்டு இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டினை நிரூபித்துவந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மீண்டும் சிறப்பாக வந்து ஐ.பி.எல்லை விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனி தான் தலைமையேற்று நடத்துவார் என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தோனி தன்னிடம் அனைத்து விஷயங்கள் குறித்தும் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். சிறப்பான ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா பாதிப்பிலிருந்து ருதுராஜ் மிகவும் தாமதமாக தேறியதாக தெரிவித்துள்ள ஸ்ரீனிவாசன், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ பிளசிஸ் ருதுராஜை இளம் விராட் கோலி என்று தெரிவித்துள்ள விமர்சனத்தை ஆமோதித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஒரு வீரரை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஓய்வை அறிவித்தார் மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மர்லோன் சாமுவேல்ஸ் !

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மர்லோன் சாமுவேல்ஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

2012 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ரன் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

ஓய்வு முடிவை அறிவித்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர்

ஐ.பி.எல்., பிக்பாஷ் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் ஆடிய சாமுவேல்ஸ் எல்லா வகையிலான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைசதத்துடன் 3,917 ரன்னும், 41 விக்கெட்டும் எடுத்துள்ளார். 207 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ரன்னும், 89 விக்கெட்டும், 67 இருபது ஓவர் போட்டியில் ஆடி 10 அரைசதம் உள்பட 1,611 ரன்னும், 22 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.

டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமிரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!!

அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றிது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியயை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையயை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். மேலும் சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சுறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக்கொண்டு தங்கள் வினாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள் அதற்கான சன்னங்களின் விற்பனையயை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ட்ரம் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்களின் பின் இன்று அமெரிக்க மக்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தளைத்து ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம் முன்கொண்டு செல்கின்றார். அதே சமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.

முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டடுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்ற போது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதகரித்துச் செல்கின்ற போது; 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.

உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $ 3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம். அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மட்டுமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார். ஆனால் அவருக்குத் தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனானன சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெறுகின்றது.

டொனால்ட் ட்ரம்மின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காலில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.

சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது. இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் மேற்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை; என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம். சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்மின் காலம் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எணக் கொள்ளலாம்.

மேலும் டொனால்ட் ட்ரம் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதானால் டொனாலட் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமைக்குக் கீழ் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்மின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.

டொனால்ட் ட்ரமின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக்குவார் என்பதற்காக வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்மின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்மின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.

மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்கரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையயை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையயை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்மின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

ஆகையால் டொனால்ட் ட்ரமின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி கட்சிபேத மற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியயை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் கட்டமைப்பதுமாகவே அமையும். இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியயை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் தலை நிமிரச் செய்ய முயற்சிப்பார்.

இந்தப் பின்னயிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.

10இலக்குகள் வித்தியாசத்தில் மும்பையை பந்தாடி வாழ்வா? சாவா? போட்டியில் வென்றது சன்ரைசரஸ் !

ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.
அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பது போல் வார்னர் நாணயச்சுழற்சியில்  வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் டி காக். வெர்  13 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
3-வது இலக்குக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 பந்துப்பரிமாற்றங்களில்  81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 பந்துப்பரிமாற்றங்களில் 82 ஓட்டங்களுக்குள் ஐந்து இலக்குகளை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை தொடும் வாய்ப்பை பெற்றது.
150 ரன்கள் வெற்றி இலக்கு: மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்?19-வது பந்துப்பரிமாற்றங்களில் தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி பந்துப்பரிமாற்றத்தில் ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41ஓட்டங்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ஓட்டங்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 150 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின்  டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ஓட்டங்கள் விளாசிய ஐதராபாத், 10 பந்துப்பரிமாற்றங்களில்  89 ஓட்டங்கள் எடுத்தது.
டேவிட்  வார்னர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா 34 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐதராபாத் 15 பந்துப்பரிமாற்றங்களில் 137 ஓட்டங்களைத் தொட்டது. 18-வது பந்துப்பரிமாற்றத்தின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில் 85 ஓட்டங்களும்,  சகா 45 பந்தில் 58 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.