வெலிக்கந்த பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
May
May
இலங்கைப் பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
கொழும்பிலுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளன. 2009 இந்திய பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று பிற்பகலின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
மொத்த ஆசனங்கள் – 39-
தி.மு.க – 16,
காங்கிரஸ் – 10,
பா.ம.க – 5,
ம.தி.மு.க – 4,
இந்திய கம்யூ. – 2,
மார்க்சிஸ்ட் – 2
கேரளா
மொத்த ஆசனங்கள் – 20-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 12,
இந்திய கம்யூனிஸ்டு – 3
கேரளா…..காங்கிரஸ் – 1,
மதசார்பற்ற ஜனதா தளம் – 1,
பிற கட்சிகள் – 3
ஆந்திரா
மொத்த ஆசனங்கள் – 42-
காங்கிரஸ் – 29,
தெலுங்கு தேசம் – 5,
தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி – 5,
பிற கட்சிகள் – 3
கர்நாடகா
மொத்த ஆசனங்கள் – 28-
பா.ஜனதா – 18.
காங்கிரஸ் – 8,
மத சார்பற்ற ஜனதா தளம் – 2
ஒரிசா
மொத்த ஆசனங்கள் – 21-
பிஜூ ஜனதா தளம் – 11
பா.ஜனதா – 7
காங்கிரஸ் – 2
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 1
மே.வங்காளம்
மொத்த ஆசனங்கள் – 42-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 26
காங்கிரஸ் – 6
இந்திய கம்யூனிஸ்டு – 3
பார்வர்டு பிளாக் – 3
புரட்சி சோசலிஸ்ட் கட்சி – 3
திரிணாமுல் காங்கிரஸ் – 1
ஜார்கண்ட்
மொத்த ஆசனங்கள் – 14-
காங்கிரஸ் – 6
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 4
ராஷ்டிரீய ஜனதா தளம் – 2
பா.ஜனதா – 1
இந்திய கம்யூனிஸ்டு – 1
சத்தீஷ்கார்
மொத்த ஆசனங்கள் – 11-
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 1
கோவா
மொத்த ஆசனங்கள் – 2-
காங்கிரஸ் – 1
பா.ஜனதா – 1
மராட்டியம்
மொத்த ஆசனங்கள் – 48-
காங்கிரஸ் – 13
பா.ஜனதா – 13
சிவசேனா – 12
தேசியவாத காங்கிரஸ் – 9
இந்திய குடியரசு கட்சி-ஏ – 1
குஜராத்
மொத்த ஆசனங்கள் – 26-
பா.ஜனதா – 14
காங்கிரஸ் – 12
மத்தியபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 29-
பா.ஜனதா – 25
காங்கிரஸ் – 4
ராஜஸ்தான்
மொத்த ஆசனங்கள் – 25-
பா.ஜனதா – 21
காங்கிரஸ் – 4
அரியானா
மொத்த ஆசனங்கள் – 10
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 1
டெல்லி
மொத்த ஆசனங்கள் – 7
காங்கிரஸ் – 6
பா.ஜனதா – 1
பஞ்சாப்
மொத்த ஆசனங்கள் – 13
அகாலிதளம் – 8
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 2
ஜம்மு-காஷ்மீர்-
மொத்த ஆசனங்கள் – 6
காங்கிரஸ் – 2.
ஜே.கே.என் – 2
பிற கட்சிகள் – 2
இமாசலபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 4
காங்கிரஸ் – 3
பா.ஜனதா –
உத்தரகாண்ட்
மொத்த ஆசனங்கள் – 5
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 1
சமாஜ்வாடி – 1
உத்தரபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 80
மாஜ்வாடி – 35
பகுஜன் சமாஜ் – 19
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 9
ராஷ்டிரீய லோக் தளம் – 3
பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் – 4
பீகார்
மொத்த ஆசனங்கள் – 40
ராஷ்டிரீய ஜனதா தளம் – 22
ஐக்கிய ஜனதா தளம் – 6
பா.ஜனதா – 5
லோக், ஜனசக்தி – 4,
காங்கிரஸ் – 3
அசாம்
மொத்த ஆசனங்கள் – 14
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 2
சாம் கணபரிஷத் – 2
சுயேச்சை – 1
மேகாலயா மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
திரிணாமுல் காங்கிரஸ் – 1
அருணாசலபிரதேசம் மொத்த ஆசனங்கள் – 2
பா.ஜனதா – 2
சிக்கிம் மொத்த ஆசனங்கள்- 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி – 1
திரிபுரா மொத்த ஆசனங்கள் – 2
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு – 2
நாகாலாந்து மொத்த ஆசனங்கள்- 1
நாகாலாந்து முற்போக்கு முன்னணி – 1
மணிப்பூர் மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
சுயேச்சை – 1
மிசோரம் மொத்த ஆசனங்கள் – 1
மிசோரம் தேசிய முன்னணி – 1
னியன் பிரதேசங்கள்
புதுச்சேரி – பா.ம.க.
அந்தமான்-நிகோபார் – காங்கிரஸ்,
லட்ச தீவுகள் – ஐக்கிய ஜனதா தளம்
டாமன்-டையூ– காங்கிரஸ்
சண்டிகார் – காங்கிரஸ்
தத்ரா-நாகர்ஹவேலி – பி.என்.பி.
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய வெயிஸ், இந்த மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது. அவர்களை பிப்ரவரியிலேயெ இந்த பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். என்றார் கார்டன் வெயிஸ்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையான 24 மணி நேர நீர் வெட்டு அமுல் செய்யப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமை ப்புச் சபை அறிவித்துள்ளது.
மாளிகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான நீர் விநியோக குழாயிலும் மற்றும் ஹெவ்லொக் டவுனிலும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதனாலேயே இந்த நீர் வெட்டு அமுல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலபனை, பூர்வாராம மாவத்த, ஹெவ்லொக் டவுண், திம்பிரிகஸ்யாய, பாம்மன்கட, நாரஹேன்பிட்டி, பொரல்ல, சஹஸ்புர, மருதானை, மாளிகாவத்தை, கருவாத்தோட்டம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வித்தியாலய மாவத்தை, சென்றல் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி வீதி, ஆண்டிவால் வீதி, விவேகானந்தா மேடு, வாழைத்தோட்டம், அல்ஸ்ட்ரோஸ் வீதி, ஸ்டேஸ் வீதி, லெயாட்ஸ் ப்ரோட்வே, புளுமெண்டல் வீதி, மஹவத்த ஆகிய பிரதான வீதிகளிலும் அவற்றுடன் இணைந்த அனைத்து கிளை வீதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவிருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள், ஸ்ரன்வி மின் உற்பத்தி நிலையம், வெல்லம்பிட்டிய, சேதவத்த, வென்னவத்த, கெட்டுவில, மற்றும் இத்தமபவ்வ பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல் செய்யப் படவுள்ளது.
சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இதுவரை இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதன்படி குழு நடத்திவந்த கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இனி தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, கடந்த இரண்டு வருடங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தட வைகள் கூடி ஆராய்ந்து வந்தது. அண்மைய நாட்களில் 95% விடயங்களுக்குப் பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் இந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமாக இணக்கம் காணப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தீர்வுத் திட்டத்தை பிரிவு பிரிவாகத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவு செய்ய முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் உள்ளடக்கப்பட்டு தீர்வு வரைவு தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் புதிய அரசியலமைப்பொன்று அவசியமானதென்றும் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும்.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்று செயற்படுத்துவாரென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
25வது முதலமைச்சர்கள் மாநாடு மட்டக்களப்பில் இன்று (16) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரும், 25வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் நேற்று பிற்பகலிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்தனர். மட்டக்களப்புக்கு வருகைதந்த முதலமைச்சர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் மாநகர சபையின் வாடிவீட்டின் முன்பாக நின்று வரவேற்றனர்.
மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இவர்கள் வரவேற்கப்பட்டனர். இதேவேளை இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுக்காலை மட்டக்களப்புக்கு வருகை தந்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருகைதந்த அமைச்சரை மட்டக்களப்பு மாநகர சபை மேயர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். மாநகர சபையின் வாசஸ்தளத்தில் மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து மாநாட்டு ஒழுக்குகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் மாநாட்டு மண்டபத்தையும் பார்வையிட்டார்.
இம்மாநாடு நடைபெறும் மண்டபம் பலத்த பாதுகாப்புக்குட் படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வைபவரீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையுரை நிகழ்த்தி முதலமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.
இதையடுத்து மாநாடு முடிவுற்றதும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இம்மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடும் நடைபெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் சகவாழ்வு மன்றத் தலைவர் குமார் ரூபசிங்கவும் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்திருந்தனர். மாநாட்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரம் அலங்கார வளைவுகளாலும் கட்அவுட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாநகர மண்டபத்துக்கு சமீபமாக வீதியின் அருகில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் 7 முதலமைச்சர்களுடனும் காணப்படும் முழு உருவம் கொண்ட 8 கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து முதலமைச்சர்களும் அதிதிகளும் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க கலை, கலாசார நிகழ்வுகளுடன் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
பாடும் மீன் ஹோட்டல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு வாடி வீட்டில் முதலமைச்சர் சந்திரகாந்தன் முதலமைச்சர்களுக்கும் அதிதிகளுக்கும் நேற்று இராப்போசன விருந்தளித்து கெளரவித்தார்.
கொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தற்கொலை அங்கிகளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெவித்தார்.
குறிப்பிட்ட வீட்டிலிருந்த ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழங்கிய தகவலின்படி வெள்ளவத்தையில் மேலும் இரு இளைஞர்களும் இரத்மலானை இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு வெள்ளவத்தை இல. 55 பெனிகுயின் வீதியிலுள்ள சன்பிளவர் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர். கட்டடத்தின் ஏழாவது மாடி வீடொன்றில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 4 இளைஞர்கள் தங்கியிருந்தனர். மேற்படி இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டின் (சீலிங்) கூரைப் பகுதியை பொலிஸார் சோதனையிட்டனர்.
இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தற்கொலை அங்கிகளையும் கிளேமோர் குண்டையும் பொலிஸார் கண்டெடுத்தனர். இச்சமயத்தில் திடீரென சந்தேக நபர்களுள் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட நபர் சுரேந்திரன் என்றழைக்கப்படும் தாமோதரபிள்ளை சச்சிந்திரன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு களுபோவில ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் வழியாக பாய்ந்த சந்தேக நபர் முதலாவது மாடியில் வெள்ளை இரும்பு சட்டங்களால் அமைக்கப்பட்ட கூரையில் விழுந்து மரணமானார். கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் மேலதிக நீதவான் தர்ஷிகா விமல சிறி சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணைகளை மேற்கொண்டார். கைதான மூன்று இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைத் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு ஆரம்பமான இத் தேடுதல் நடவடிக்கைகள் நள்ளிரவு 12.00 மணிவரை நடைபெற்றது. சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை தேசிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஈராக்கின் உதவி ஜனாதிபதி அதி அத்துல் மகதியைச் சந்தித்து உரையாடினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளர்.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளைப் பேணும் வகையில் ஈராக்கில் இலங்கைத் தூதரகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மேலும் கூடுதலான தேயிலையைக் கொள்வனவு செய்ய ஈராக் நடவடிக்கை எடுக்கும் என ஈராக்கின் உதவி ஜனாதிபதி இங்கு உறுதி தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டு, 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு தொடரப்பட்டிருந்தது முதல் நேற்று முன்தினம் வரை லீடர் பப்ளிகேஷனில் பாதுகாப்புச் செயலாளர் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. கல்கிசை மாவட்ட மேலதிக நீதவான் மெக்கி மொஹமட் இந்த வழக்கை நேற்று மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே லீடர் பப்ளிகேஷன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசுரிப்பதில்லையென உறுதியளித்தனர்.