ஈராக்கின் உதவி ஜனாதிபதியுடன் நேற்று பேச்சுவார்த்தை

pre-iraq.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஈராக்கின் உதவி ஜனாதிபதி அதி அத்துல் மகதியைச் சந்தித்து உரையாடினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளைப் பேணும் வகையில் ஈராக்கில் இலங்கைத் தூதரகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மேலும் கூடுதலான தேயிலையைக் கொள்வனவு செய்ய ஈராக் நடவடிக்கை எடுக்கும் என ஈராக்கின் உதவி ஜனாதிபதி இங்கு உறுதி தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *