இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டாக்டர்.பீட்டர் ஹேய்ஸ், கடந்த 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவருடன் இணைந்து அவரது மனைவி கிரிஸ்டி ஹேய்ஸும் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சாட்சியங்களைத் திரட்டும் பணிகளின் மூன்றாம் நாள் இன்றாகும். இன்றைய தினம் எஸ்.எல். குணசேகர மற்றும் ஆனந்த சங்கரி ஆகியோர் சாட்சியமளித்தனர்.
A முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.
இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.
இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.
இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
காலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவகே உட்பட 10 பேரை ஆகஸ்ட் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார்.
புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத ¡கவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார். சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார்.
ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று (12) இரண்டாவது நாளாக கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்ட மாஅதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த திருமதி விஜேமான, சிறுவர் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது தமது அவதானிப்புகளை முன்வைத்தார்.
கொங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் சிறுவர்களின் நலன் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும்தான் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் 60% – 70% வரையில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட சிறுவர்களே இருந்தனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இளைஞர்கள் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும். கல்வி கற்காதவர்களுக்கு முறைசாராக் கல்வியையும் தொழில் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலமே உரிய அபிவிருத்தியை எட்ட முடியும். நாம் என்னதான் புனர்வாழ்வை அளித்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புலி இளைஞர்கள் பற்றிய சிந்தனை வேறாகத்தான் உள்ளது. எனவே, முன்னாள் புலிகள் இயக்க இளைஞர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் பெற்றோர்களுடன் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்.
இலங்கையின் சமாதானம்,ஸ்திரத்தன்மை தொடர்பான தற்போதைய நிலைவரத்தை சீனா வரவேற்றுள்ளது. இலங்கையானது தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் உள்சார் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த 53 வருடங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள்,புரிந்துணர்வுகள் என்பவற்றை சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்துள்ளார். தாய்வான்,திபெத் தொடர்பாக சீனாவின் ஒரே சீனக்கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார். அக்டோபரில் ஷங்காயில் இடம்பெறும் எக்ஸ்போ2010 இறுதி வைபவத்தில் கலந்துகொள்ள வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சீன உதவிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் பீரிஸுக்குக் கூறப்பட்டுள்ளது.
வெளி நாட்டு மாணவர்கள் உள்ளூரில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு அடுத்த வருடம் 200 புலமைப்பரிசில்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் முதலாவது தொகுதியாக சீனா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.இலங்கை பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைச்சு அபிவிருத்தி செய்யவுள்ளது. 10 ஆயிரம் வெளிநாட்டு மாணவர் களை கவரும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
“வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்கு இது நல்ல வழியாகும். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பட்டமொன்றை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறுகிறார். 13 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், பிரின்டர்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ் வாறு கூறினார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படு த்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் 50 பஸ்களையும் 50 ஜீப் வண்டிகளையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய உயர் கல்வி அமைச்சரை அடுத்த மாதம் தான் சந்திக்க திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவி கை, கால் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை பரீட்சைகள் யாவும் முடிவடைந்த பின்னரே நடத்துவது என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவி பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சைகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதால் குறித்த மாணவியை பொலிஸ் விசாரணைக்குட்படுத்தும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்ற நோக்கம் காரணமாகவே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவியின் கைக்கட்டினை அகற்றிய பாடசாலை மின்சார பிரிவு சிற்றூழியர் இக்கட்டு மாணவி தன்னைத்தானே கட்டியதாக தெரியவில்லை என கூறியுள்ளதால் விசாரணைகள் பல திசைகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவி பரீட்சை முடியும் வரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.