Multiple Page/Post

முழு உண்மைகளை வெளிக் கொண்டு வராத பாடங்கள்! : வடக்கான்ஆதாம்

Douglas_Devananda_at_Islandsகற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் உரையாற்றிய எமது முன்னாள் தோழரும் இங்குள்ள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரையில் பெரும்பகுதியானவற்றுடன் ஒத்துப்போகும் அதேவேளையில் அவர் சொல்ல மறந்த கதை (சேரனின் படம் அல்ல) சிலவற்றை நாம் கூறிக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முதலாவதாக அவர் சிங்கள மக்களை விழித்து இந்த உரையை ஆற்றியுள்ளார் போலுள்ளது. ஏனெனில் அப்பாவி மக்களான உங்களைக் கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களைப் பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப் போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக பாருங்கள் தமிழ் மக்களை பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஓர் இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத் தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும் என கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் தமிழ் மக்களுக்கும் வேண்டும் என அவர் நினைக்கவில்லை அல்லது தமிழ் மக்களை விழித்து அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த சிங்கள இராணுவத்தின் ஊடாக சிங்கள மக்களைப் பார்க்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். அவர் அதை கூற மறுக்கிறார். ஏன்? தமிழ் மக்கள் தெளிந்து விட்டார்கள் என கருதுகின்றாரா? அல்லது அவரைப் போல் எல்லா இனங்களையும் நேசிக்கும் தலைவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் இல்லை என நினைக்கிறாரா?

இலங்கைத் தீவிலே வாழும் அனைத்து இனங்களும் செழித்து வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கு எந்தவித ஊசலாட்டமும் இன்றி உண்மைகளை எடுத்து வைப்பதன் மூலமே பாடங்களை கற்க முடியும். அல்லது விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் புலித் தலைமை செய்ததை புலியின் முகவர்கள் தமிழ் மக்களுக்கு மறைத்து விட்டதைப் போன்றே முடியும் என்பது திண்ணம்!

“கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதேபோலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயை புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்படுத்தலாம்” என கூறுகின்றார்.

சரி! இவரது கட்சி எத்தனை கூட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் நடத்தியுள்ளது. தமிழ் மக்களின் நிலமைகளை சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்களா? (என்ன நடக்குது இங்கே ஒன்றுமே புரியவில்லை என்ற கவிதைதான் ஞாபகம் வருகின்றது) இவர் செய்ததெல்லாம் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்ற சிக்கலான ஆட்களுடன் அரங்கம் அமைத்ததுதான்.! புலிகளை வென்றதற்காக விழா எடுப்பவர்களுடன் இனப்பிரச்சனை பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துமாறு கோரினால் நன்றாக  இருந்திருக்கும்! மேலும் ஈபிடிபி கட்சியானது சிங்கள மக்கள் மத்தியிலும் சேவைகளைப் புரிந்து தேசிய கட்சியாக வளர வேண்டும். சிங்கள மக்கள் விரும்பியிருந்த போதும் டக்ளஸ் தன்னை ஒரு தமிழ் தலைவனாகவே கருதி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றார்.

இவ் ஆணைக்குழு முன் முழுஉண்மைகளையும் பேசுவதன் மூலமே பாடங்களை கற்றறிய முடியும் என்பதே யதார்தமாகும். ஆனால் மாண்பு மிகு மந்திரியார் சிங்கள அதிகார மட்டங்களுக்கு நோகாமல் அவர்களது கடந்த கால நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை மட்டுப்படுத்திக் கூறியும் புலித் தலமை இழைத்த குற்றங்களை உரத்துக் கூறுவதன் மூலம் (இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் புலிகளின் குற்றங்களை மிகைப்படுத்தி கூறவில்லை) யாரையோ திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் போலும். தொடர்ந்து வந்த அரசுகளாலும் இராணுவத்தாலும் புலிகளாலும் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காது. இவற்றைசொல்ல மறுப்பவர்ளை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது தலைவர்களாக கருத மாட்டார்கள். இவரது உரையில் தமிழ்மக்களை விட சிங்கள மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள் போன்ற கருத்தே தொக்கி நிற்கின்றது.

ஜனநாயக வழியில் முப்பது வருடங்கள் (1947-1977) போராடிய தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் இந்த சந்தர்ப்பத்தை அயல்நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதையும் தனது இருப்பு நிலை (மந்திரி பதவி) காரணமாக தெளிவாக எடுத்து வைக்க மறந்து புலிகளுக்கெதிரான பிரசங்கத்தையே (நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.) செய்துள்ளார். இடையிடையே அரசுகளின் தவறுகளையும் அவர்களின் மனம் கோணாமல் தெளித்துள்ளார்.

சுதந்திரமடைந்த உடனேயே இந்திய வம்சாவழி குடியுரிமை பறிப்புச் சட்டம் அதைத் தொடர்ந்து தனிச்சிங்கள சட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என வேகமெடுத்த சிங்கள ஆட்சியாளர்களின் அநியாயங்கள் தரப்படுத்தலில் வந்து நின்ற போதே ஆயுதப் போராட்டத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டதென்பதை இவர் அங்கு அடித்து சொல்ல மறந்தாரா அல்லது தவிர்த்தாரா?

இணைப்பு மொழியாக இருந்த ஆங்கிலத்தை சுய பாசை திட்டத்தின் மூலம் இல்லாதொழித்து இன்று இவர் கூறும் உலகமயமாக்கலில் ஒரு பகுதியான கோல் சென்றர் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கு ஆப்பு வைத்தவர்கள் யார்? ஒரு முட்டாள் பிரபாகரனின் எதிர்காலம் பற்றிய அறிவின்மையை எடுத்துக் கூறிய மந்திரியார் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளின் மக்களின்; எதிர்காலம் பற்றிய தவறான திட்டங்களினால் தென்கிழக்காசியாவிலேயே அதிக கல்லியறிவு பெற்ற ஒரு நாட்டை சுடுகாடாக்கியது பற்றி கூற மறந்துள்ளார்.

மாறி வரும் உலகப் போக்கை புரிந்து கொண்டு உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு……. எனவும் அவர் கூறியுள்ளார். மிக உண்மையான விடயம். இதை புலிகள் புரிந்து கொள்ளாதது மடமை. ஆனால் இவர் செய்யும் அரசியலுக்கு இது மிகவும் தேவைப்படுகின்றது என்பதே எமது கருத்தாகும். நாளை நிலமை மாறி உலக ஒழுங்கு மாறினால் இவரது நிலமை என்ன?

“இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பிந்திய காலந்தொட்டு இன்றுவரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை. அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டி விடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை. இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது “

இந்த கருத்தானது தனது அரசியலுக்கு வலு சேர்க்க டக்ளஸ் கூறும் வாய் வார்த்தைகள் ஆகும். டக்ளஸ் கூறும் இக்காலத்தில் ஒரு இனக்கலவரம் என்பது தமிழ் ஈழத்திற்கான அல்லது புலிகளின் அரசியலுக்கான மைல்கல் என்பது முட்டாள் புலிகள் போல் அல்லாது மிகப் புத்திசாதுரியமான இலங்கை அரசிற்கு புரியாதது அல்ல. அதனால் தான் புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பல தடவை கொலை புரிந்து இனக்கலவரம் ஏற்பட முயற்சி செய்தார்கள் என்பது டக்ளஸிற்கும் புரியாதது அல்ல.

உண்மைகளை தெலைத்து விட்டு அல்லது தமது அரசியல் நலன் கருதி தவிர்த்து விட்டு, வசதியாக மறந்து விட்டு பாடங்களைப் படிக்க முடியாது. எனவே அழகிய இலங்கைத் தீவில் எல்லா இன மக்களும் நன்றாக வாழ பிரச்சனை எங்கே உள்ளது  என அறிய வேண்டும். லண்டனில் இலங்கை தூதரகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி தான் ஒரு பௌத்தர் என கூறுகின்றார். அது அவரது உரிமை. அது அவரது அடையாளம். இதே போல் சிறுபான்மை மக்களும் சொல்லுவதற்கு வழி விட வேண்டும்.!!

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

ஐ. தே. க உட்பூசல்: ரணிலின் அழைப்புக்கு காத்திருக்கும் அதிருப்திக்குழுவின் 25 எம்.பிக்கள்

unp_logo.jpgகட்சித் தலைவரிடமிருந்து அழைப்பு வரும்வரையே காத்திருப்பதாக ஐ.தே.கவில் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவிக்கின்றது. இன்றோ நாளையோ அழைப்பு வரலாமென குழு நம்புவதுடன், எவ்வாறெனினும் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி. தலதா அத்துகோரள தெரிவித்தார். கட்சித் தலைவருடனான பேச்சுவார்த் தைக்குப்பின் குழு கூடி கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க வின் கட்சி உட்பூசலுக்கு ஒரு வாரகாலத்தில் தீர்வு காண தவறுமிடத்து அக்கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது அந்த 25 பேரும் தனியான குழுவாக அமரவும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குருநாகல் மாவட்ட ஐ. தே.க எம்.பி. தயாசிறி ஜயசேகர பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். எனினும் இதற்கான தீர்க்கமான பதிலொன்றை ஐ. தே. க. தலைமை நேற்று வரை முன்வைக்கவில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளரெனத் தெரியவருகிறது. இதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டனர்.

இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியை விட்டு தனித்து இயங்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமது கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் சிறந்த நாடு இலங்கை – பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்

sri-lanka000.jpgதியாக மனப்பான்மையுடன் தான உணர்வும் புன்னகையும் கொண்ட மக்கள் வாழும் உலக நாடுகளில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது. Charities aid foundation என்ற பிரிட்டிஷ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்து ள்ளது.

தியாக மனப்பான்மையுடன் கூடிய மக்கள் வசிக்கும் உலக நாடுகளில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை ஆசிய நாடுகளிடையே முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் உலகில் முதல் 18 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,

1. அவுஸ்திரேலியா, 1. நியூசிலாந்து 3. அயர்லாந்து, 3. கனடா, 5. சுவிட்சர்லாந்து, 5. அமெரிக்கா, 7. நெதர்லாந்து, 8. பிரிட்டன், 8. இலங்கை, 10. ஆஸ்திரியா, 11. லாகோஸ், 11. சியராலியோன், 13. மோல்டா, 14. ஐஸ்லாந்து, 14. துர்க்மெனிஸ்தான், 16. கயானா , 16. கட்டார், 18. ஹொங்கொங், 18. ஜெர்மனி, 18. டென்மார்க், 18. கினி.

மட்டு. மாவட்டத்தில் – ஒரு இலட்சத்து 40,000 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை

paddy-field.jpgஇலங்கையின் அதிக நெல் உற்பத்தியைத் தரும் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான விவசாயிகள் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை 13 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெள்ளி மாலை நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன், கிழ க்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய அதிகாரிகள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம் மாவட்டத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் பெரும்போக நெற் செ ய்கை ஆரம்பமாகி எதிர்வரும் 2011ல் மார்ச் மாத இறுதிப் பகுதியில் அறுவடை நடைபெறும்.

ஒட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை

ஓட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல் உற்பத்தித் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு ஐம்பது தொழிலாளர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானிலுள்ள செங்கல் உற்பத்தி சூளையை சென்று பார்வையிட்ட ஆளுநர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.  தற்பொழுது, நாளொன்றுக்கு 8000 செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 23 தொழிலாளர்களே சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அவர்,  தற்பொழுது இதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதிகரிக்கத் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப் பிட்டார்.

செங்கல் உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்காக வட மாகாண சபை 20 இலட்சம் ரூபாவை ஏற்கனவே வழங்கியதாகத் தெரிவித்த அவர் தற்பொழுது இதன் செயற்பாடுகள் திருப்தியாகக் காணப்படுகிறதென்றார்.  வட மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளுக்கு இங்கிருந்தே செங்கற்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், இந்தப் பிரதேச தொழிலாளர்கள் மேலும் நன்மையடைபீயவுள்ளனர் என்றும் சுட்டிக் காட்டினார். ஆளுநரின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கைத்தொழில் திணைக்களத்தின் கூட்டிணைப்பின் மூலம் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1312 கைதிகள் நேற்று விடுதலை

0010.jpgசர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

50பேர் கொண்ட அமெரி. வர்த்தக குழு அடுத்தவாரம் வருகை – முதலீடு குறித்து ஆராய வடமாகாணம் செல்ல ஏற்பாடு

அமெரிக்காவிலிருந்து 50 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவர்களுக்கு இலங்கையின் முதலீடு தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் அமெரிக்க வர்த்தகத் தூதுக் குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்தும் ஆராயவுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தூதுக் குழு இலங்கைவரவுள்ளது என்றார். வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர் மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றார்.

வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவையான ஹோட்டல்கள், தங்குமிட, உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது அதிகமான நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா