2000 தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பெண்கள் உட்பட 74 பேர் நேர்முகப் பரீட்சையூடாக பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
24
24
ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரான மிங்கோராவுக்குள் தமது படைகள் நுழைந்துவிட்டதாக கூறியுள்ள பாகிஸ்தான் இராணுவம், அங்கு தலிபான் கிளர்ச்சிக்காரர்களுடன் நேரடி மோதல்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கையில், இந்த மோதல்கள் மிகவும் முக்கியமானவை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் 17 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான்களின் பெரும்பாலான வெடிபொருட் கிடங்குகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவம் கூறுகிறது. ஆனால், இந்த இழப்புக்களை தலிபான்கள் மறுத்துள்ளனர்
செவனப்பிட்டி பஸ் – ரயில் விபத்தில் படுகாயம டைந்து வெலிகந்த ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு மாணவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மொஹமட் இஸ்மாயில் ஹபீபுல்லா என்ற இரண்டாம் ஆண்டு 7 வயது மாணவனே மரணமானார்.
இவரது தாயார் சல்மாவும் நேற்று கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு.