Multiple Page/Post

96 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது இலங்கை

srilanka0000.jpgகொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 96 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு முதன் இன்னிங்சில் சுருட்டியது.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

494 ஓட்ட வெற்றி இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 397 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 96 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SRI LANKA 416 and 
311-5 dec

 NEW ZEALAND      
First Innings 234

NEW ZEALAND      
Second innings       
overnight 182-6)

T. McIntosh b Prasad      7
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw Herath     50
R. Taylor C M Jayawardene b Herath   27
J. Ryder lbw Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram c Sangakkara b Dilshan    56
D. Vettori c Herath b Muralitharan  140
J. Patel c Kapugedera b Muralitharan   12
I. O’Brien c P. Jayawardene b Herath   12
C. Martin  not out        0

EXTRAS: (13-lb, 1-nb)     14
TOTAL: (all out, 123.5 overs)   397
FALL OF WICKETS: 1-36, 2-41, 3-97, 4-131, 5-158, 6-176,  7-300, 8-318, 9-387, 10-397
BOWLING: Paranavitana 1-0-2-0, Thushara 23.3-1-78-0 (1-nb),
 Prasad 15-1-56-1, Herath 48-9-139-5, Muralitharan 28.2-2-85-3,
 Dilshan 6-0-15-1, Kapugedera 2-0-9-0

Result: Sri Lanka won by 96 runs to seal a 2-0 series
victory.
 

மருந்துகள் வழங்கப்படும் 25 மில். பொலித்தீன் உறைகளும் ‘டெங்கு’ பரவலுக்குக் காரணமென ஆய்வு மூலம் தகவல்

இலங்கையிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை வழங்கவென பயன்படுத்தப்படும் சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகளும் கழிவுப் பொருட்களாக வருடாந்தம் சுற்றாடலில் சேர்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கழிவுப் பொருட்களாக சுற்றாடலில் சேரும் பொலித்தீன் உறைகள் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் பாரிய பங்களிப்பு செய்து வருவதும் அந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இதனை அடிப்படையாக வைத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மருந்துப் பொருட்களை வழங்கவென பொலித்தீன் உறைகளைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடதாசி உறைகளைப் பயன்படுத்துமாறும் தனியார் மருந்தக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

நாட்டில் சுமார் 6000 தனியார் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் நுகர்வோருக்கு மருந்துப் பொருட்களை வழங்கவென வருடத்திற்கு சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  அவை கழிவுப் பொருளாக சுற்றாடலில் சேருகின்றன. இது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்குப் பாரிய பங்களிப்பு செல்வதுடன், சுற்றாடலுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவென பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சரிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணத் திட்டமிட்டிருக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்துவது, சந்தைப்படுத்துவது தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து கொழும்பிலுள்ள 1500 தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.

எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

olmert222.jpgஇஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வியாபாரி ஒருவரிடம் இருந்து பணம் நிரப்பப்பட்ட அஞ்சல் உறைகளை பெற்றது, பிரயாண செலவுகளை அதிகமாக கணக்கு காண்பித்து இஸ்ரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் எகுத் ஒல்மர்ட் மீது பதிவு செய்துள்ளார்.

ஜெருசலேத்தின் மேயராக இருந்த போதும், பின்னர் காபினட் அமைச்சராக இருந்த போதும் இவர் இந்த தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என எகுத் ஒல்மர்ட் கூறி வருகின்றார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு உடன் இடமாற்றம்

அம்பலாங்கொட பகுதி வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய அம்பலாங்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடங்கலான நால்வர் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அம்பலாங்கொட பகுதி வியாபாரியான எச். ஜி. அநுர கிரிசாந்த காயமடைந்து பலப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கலான 4 பொலிஸார் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் பொறுப்பதிகாரி அநுர இரத்தினபுரிக்கும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஹம்பாந்தோட்டைக்கும், மற்றொருவர் பதுளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

தனது சகோதரியுடன் மரண வீடொன்றுக்குக் காரில் சென்ற மேற்படி வியாபாரியை களுவடுமுல்ல பகுதியில் வழிமறித்து பொலிஸார் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகவும் காரில் கஞ்சா கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளனர். பின்னர் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஆனால் காரில் கறிவேப்பிலை கட்டுகளே எடுத்துச் செல்லப்பட்டதாக வியாபாரியின் சகோதரி பொலிஸில் முறையிட்டிருந்தார்.

இதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்பலாங்கொட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கைப்படி 4 பொலிஸாரும் இடமாற்றப்பட்டனர்.
 

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த இந்தியாவுடன் இணைந்து இலங்கை செயற்படும்: ரொமேஸ் ஜயசிங்க

romesh-jayasinghe.jpgஇந்தியா வுடன் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள குடியமர்த்தல் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்.செய்தி சேவைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களை மீள குடியமர்த்துவதற்காக, அரசாங்கம் தற்போது துரித கெதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் முன்பிருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஒத்துழைப்புடன், இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடைய கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் துரித வாக்களிப்பு – அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எதிர்க்கட்சி நம்பிக்கை

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலநிலை மோசமாக இருந்தபோதும் பெருமளவான மக்கள் வாக்களித்தனர். தொழிற்கட்சியின் ஐம்பது வருட ஆட்சி முடிவுக்கு வந்து நீண்ட காலங்களாக எதிர்க்கட்சியாகவுள்ள ஜனநாயகக் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்குமென பெரும்பானலான மக்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

 அண்மைக் காலமாக ஜப்பானில் நிலையான ஆட்சி இருக்கவில்லை. ஆளும் கட்சிக்குள் உண்டான கருத்து மோதல் களால் அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். உலக நிதி நெருக்கடியால் கடுமையாக ஜப் பான் பாதிக்கப்பட்டமை, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநா யகக் கட்சி வென்றமை போன்ற காரணங்களைக் காட்டி எதிர்க்கட்சியின் வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னூறுக்கும் மேலான ஆசனங்களை எதிர்க்கட்சி பெறுமென எதிர்பார் க்கப்படும் நிலையில் சிலர் இதை அளவுக்க திகமான மிகைப்படுத்தல் எனவும் கூறி யுள்ளனர். ஆளும் கட்சியான தொழிலாளர் கட் சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற கடும் பிரயத்தனம் செய்கின்றன.

 நாட்டில் என்ன நடக்கப் போகிற தென்பதைக் கூற முடியாது. ஆனால் ஒரு மாற்றத்துக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்தேன். இவ்வாறு கூறினார் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர். வாக்குறுதிகள் அளித்தாற் போல் அனைத்தையும் ஜனநாயகக் கட்சியினர் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

தொழிற் கட்சியைவிட ஜனநாயகக் கட்சி சிறந்தது. என உணர்ந்து வாக்களித்ததாகக் கூறினார். மற்றொரு வாக்காளர். சிறுவர்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வீட்ரிமையாளர்களுக்கான கடன்கள் விவசாயிகள் ஹய்வூதியத் திட்டம் போன்ற பல நலத் திட்டங்களை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது.

நீண்ட கால (ஐம்பது வருட) ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி வரியை ஐந்து வீதத்துக்கு மேல் அதிகரிப்பதில்லை என்றும் சனத்தொகை வளர்ச்சிக் கேற்ப வீணான செலவுகளைக் குறைக்கவுள்ள தாகவும் தொழிலாளர் கட்சி விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கட்சிகளின் வாக்குகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் இலங்கையும் மெக்ஸிக்கோவும் -எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவிப்பு

reporters000.jpgஇலங் கையும் மெக்ஸிக்கோவும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமற் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான 26 ஆவது சர்வதேச தினம் நினைவு கூரப்படுவதையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடக்கணக்காக காணாமற் போனோர் தொடர்பாக எதுவும் அறியப்படவில்லை. அதே போல் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச முகவர்களால் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது உள்ளூர் பயங்கர குற்றவாளிகள் தமது வெற்றிகளுக்காகக் கடத்துகிறார்களா?

ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களாலேயே அநேக காணாமற் போன சம்பவங்கள் நிகழ்ந்துளளன என்பது தெளிவாகியுள்ளது. காணாமற்போன ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்காக நாம் கவலை கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். நிச்சயமற்ற நிலையில், அவர்களின் விதி என்ன என்பது புரியாத சூழ்நிலையில் அவர்கள் காத்து

இருக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணாமற் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென நாம் வற்புறுத்துகிறோம். பலவந்தமாகக் கடத்தப்படுவோரின் பாதுகாப்புக்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி சாத்தியமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் கோருகிறோம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மெக்ஸிக்கோவில் 2000 ஆம் ஆண்டு முதல் எட்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக இது விளங்குகிறது.

மொரிசியோ எஸ்ட்ராடா சாமோரா எனும் ஊடகவியலாளர் 2008 பெப்ரவரி 12 முதல் காணாமல் போயுள்ளார். வாரப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் 20 நவம்பர் 2006 இல் காணாமல் போயுள்ளார். கைத்தொலைபேசி மூலம் இரவு 7.15 மணிக்கு கிடைத்த அழைப்பொன்றின் பேரில் ஒருவரைச் சந்திக்கச் சென்றவர் மாயமானார். 7.30 மணிக்கு அவரது மகனுக்கு அழைப்பொன்று வந்தது. ஆனால் சில குரல்கள் அதனை தடை செய்யுமாறு கூறுவது அவரது மகனுக்குக் கேட்டது. அதற்கு மேல் எவ்விதத் தகவலும் இல்லை.

2009 ஜனவரியில் சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பின் குழு இலங்கையின் கடத்தல், காணாமல் போதல் தொடர்பான கலாசாரத்தைக் கண்டனம் செய்தது. ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 2007 பெப்ரவரி 15 முதல் எவ்விதத் தகவலும் அவரது குடும்பத்தாருக்குத் தெரியவில்லை. இராணுவம் இதில் சம்பந்தப்படவில்லை என மறுத்தது. வடிவேல் நிமலராஜன் இவர் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்தவர். 2007 நவம்பர் 17 முதல் காணாமற் போனார். கடத்தப்பட்டதாக நண்பர்கள் நம்புகிறார்கள்.

ஈரானில் பிரோஸ்தவானி எனும் ஆசிரியர் 1998 ஆகஸ்ட் இறுதியில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அறிகுறி இல்லை.

2000 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஊடகவியலாளர் அக்பர் கான்ஜி மாயமானார். கொலையொன்றில் அமைச்சரின் தொடர்பு குறித்து இவர் எழுதியிருந்தார்.

காம்பிரியாவில் எப்லிமா மன்னே எனும் ஊடகவியலாளர் 2006 ஜூலை 7 முதல் காணாமல் போனார். அன்று முதல் அவர் குறித்த தகவல் இல்லை. ஆபிரிக்கக் கண்டத்தின் எரித்திரியாவில் பல ஊடகவியலாளர்கள் 2001 முதல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இருப்பிடம் எங்கே என்பது குறித்தோ அவர்களது நிலைமை என்ன என்பது பற்றியோ எதுவித தகவலும் அவர்களது குடும்பத்தாருக்குத் தெரியாது. தலைநகர் அஸ்மாராவில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் “மௌனம்’ சாதிக்கிறார்கள்.

வன்னியிலும் மட்டக்களப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

வன்னியிலும் மட்டக்களப்பு- கோரக் கல்வி மடுவிலும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37 மற்றும் 273 ஜொனிகுண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் மீட்டெடுத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் வவுனியா, விளானிக்குளம் மற்றும் பிலும்திகுளப் பிரதேசங்களில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது 864 மிதிவெடிகளையும், 15 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்று இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளையும் அதற்குரிய இரு மெகஸின்கள், மற்றும் 18 ரவைகளையும் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசங்களிலும் மட்டக்களப்பிலும் மீட்கப்பட்ட ஆயுதங்களினதும், வெடிபொருட்களினதும் விபரம் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், வன்னியில் விஸ்வமடு, வெள்ளமுல்லி வாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டுக்குளம் மற்றும் மட்டக்களப்பு கோரக்கல்லிமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இத்தேடுதல்களின்போது 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் 37, கைக்குண்டுகள் 14, ஆர். பி. ஜி-6, ரி-56 ரக துப்பாக்கிகள்-3, அதற்குரிய மெகஸின் -1, ரவைகள் 15, அருள்குண்டுகள்-2, பொறிவெடி -1, உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

இலங்கையர்களுக்கு விஸா வழங்கும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா தெரிவிப்பு

british_flag.jpgஇலங்கை யர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விஸா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விஸா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் – சீமான்

siman0000.jpgஇலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.  தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ஷ தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.

இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 இலட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜுன் 18 இல் ஊர்வலம் நடத்தினோம்.  அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. இதனால் (29ஆம் திகதி நேற்று) தூத்துக் குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.

உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை என்றார்.