Multiple Page/Post

சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் !

ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.

 

219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

 

வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனுக்கான நிவாரண உதவிகளை தடுக்கும் இஸ்ரேல்!

காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்காலப் பிரிவு தலைவா் லூயிஸ் வாட்டரிஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸாவுக்குள் தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது. அந்தக் கெடு முடியும் நிலையிலும் போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

 

 

அதற்குப் பதிலாக, பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறியுள்ளது என்றாா் அவா்.

 

முன்னதாக, காஸாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் 12-ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

 

 

காஸா உயிரிழப்பு 43,665: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது.

 

 

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 போ் உயிரிழந்தனா்; 147 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு ஒக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,03,076 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகளை பெறாத மூன்று லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள்!

பொதுத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

 

எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் தபால் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துமீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுகூறிய அனுர குமாரவை சாடும் நா.த.க சீமான் !

இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர கூறியுள்ளமை தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

பாரிஸ் லாகுர்னே சிவன் கோவிலை முற்றுகையிட்ட பொலிஸார்! கோயில் உரிமையாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் அமைப்பாளரான குடும்பி ஜெயந்திரன்!

12.11.2024 ஆம் திகதி காலை10 மணியளவில் 20 பேர் அடங்கிய பொலிஸ்ஸார் உட்பட்ட வருமான வரிச் சோதனை செய்யும் அதிகாரிகள் குழுவால் சிவன் கோயில் முற்றுகையிடப்பட்டது. பல மணிநேரங்கள் நீடித்த இந்தச் சோதனை முடிவில் அர்ச்சனை சீட்டுக்க்கள் விற்பனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கணக்காளர் மற்றும் விற்பனையாளர் திரு என்றழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி ஆலயத்தில் திரட்டப்படும் நிதி யாழில் லக்ஸ்ஹொட்டல் நடத்தவும் அங்கு நடைபெறுகின்ற காமக் களியாட்டங்களுக்கும் யாழில் அரசியல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை தேசம்நெற் பல தடவை சுட்டிக்காட்டி வந்தது.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் வயோதிப ஆண்களால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்களுடைய வேறு தேவைகளுக்கே பயன்பட்டு வருகின்றது என்பதற்கு லாகுர்னே சிவன் கோவிலும் குடும்பி ஜெயந்திரனும் நல்ல உதாரணம். புலம்பெயர் மக்கள் ஆலயங்களில் செலவிடும் பணம் பெரும்பாலும் சட்டவிரோதமாக அல்லது அநியாயமாகவே அழிந்து போவதாக உள்ளது.

மேலும் வெற்றிவேலு ஜெயேந்திரனின் பினாமியும் தற்போதைய ஆலயத் தலைவருமான இரத்தினம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியுடன் வரும்படி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் குடும்பியின் நீண்ட கால பினாமியான கருணா என்றழைக்கப்படும் சிவகுருநாதன் கருணாகரனும் நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலிமிருந்து இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே பிரான்ஸ் அரசாங்கத்தின் வருமான வரி அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை வளையத்திற்குள் பாரிஸ் சிவன் கோயில் வந்துள்ளது. சமீபத்தில் புரட்டாதி சனி விரதகாலத்தில் மட்டும் ஏமாளி பக்தர்கள் சிவன் கோயிலில் எரித்த எள்எண்ணைய் பொதி மூலம் வாரத்திற்கு 25000 தொடக்கம் 30000 யூரோக்கள் வரை வசூலானதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலின் அறங்காவலர் மற்றும் ஸ்தாபகருமான குடும்பி வெற்றிவேலு ஜெயேந்திரன் 2004 ஆம் ஆண்டில் பிரான்ஸில் இதேமாதிரியான ஒரு வரி ஏய்ப்பு மற்றும் போலி விசாக்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையலடைக்கப்படிருந்தார். அப்போது குடும்பி ஜெயாவால் நடாத்தப்பட்டு வந்த எக்ஸ்போலி என்ற சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனமும் பிரான்ஸ் அரசாங்கத்தால் இழுத்து மூடப்பட்டது.

அந்த வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது பெருந்தொகை பணத்தை நட்ட ஈடூடாக செலுத்தி பிணையில் இலங்கைக்கு வந்த குடும்பி போலி ஆள் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுடன் மக்கள் ஐக்கிய சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்ற பதவியுடன் அரசியல் பிரமுகராக நடமாடுகிறார். இந்த மோசடிப் பேர்வழியும் பாலியல் குற்றவாளியுமான குடும்பியை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இவருடைய மைத்துனியான ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண வேட்பாளர் உமாச்சந்திர பிரகாஷ். இவர் குடும்பி ஜெயந்திரனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

யாழ்ப்பாணத்தில் பதின்மவயது பெண் பிள்ளைகளை சீரழித்துவரும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பாரிஸ் சிவன் கோயிலிருந்து வரும் யூரோக்களும் உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியல் செல்வாக்குமே குடும்பியை சட்டத்தின் முன் தண்டனையிலிருந்து தப்ப வைக்கின்றன.

குடும்பி ஜெயந்திரன் உமா சந்திரபிரகாஷ் தொடர்பில் வெளிவிந்த முன்னைய செய்திகள்:

SJB Jaffna District Chief Organizer Vettivelu Jayanthiran: A Convict with Fake ID

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையானுக்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா உண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக டாக்டர் நவீன் ராம்கூலம் !

இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இந்தநாட்டில் (நவ. 10) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான – பார்டி டிராவைலிஸ்ட்(பிடி’ஆர்’) மற்றும் மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கை – நான்கு பொலிஸார் பணி இடைநிறுத்தம்!

பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வததாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிசார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே சம்பவம் தொடர்பில் மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது காண்டினங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலவரம் – அடித்து நொறுக்கப்பட்ட ரிசாத் பதியூதீனின் வாகனம் !

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிசாத் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பம் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கூட்டத்தின்போது அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

குறித்த கலவரத்தில் ரிசாத் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது.

அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.

 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

 

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

அனுர ஆட்சியில் பயங்கரவாதம் தலைதூக்குமா..?

அனுர ஆட்சியில் பயங்கரவாதம் தலைதூக்குமா..? என்.பி.பி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி என்ன..? திறமை என்ன..? – அருள் கோகிலன் உடனான நேர்காணல்!