தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியுடன் கூட்டணியின் வேட்பாளர்களும் நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டணியின் முதன்மை வேட்பாளராக செல்வரட்ணம் சுதாகரன் களத்தில் இறங்கியுள்ளார்.
இதேவேளை ஈ. என். டி. எல். எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது.
த. வி. கூட்டணி மற்றும் ஈ. என். டி. எல் எப். வேட்பாளர் பட்டியல் வருமாறு:
ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.)
வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே. விநாயகமூர்த்தி 3. ஆர். கருப்பையா 4. ஏ. ராமசாமி 5. கே. குணரட்னம் 6. வீ. கனகராஜா 7. ஆர். கணேசன் 8. கே. முருகையா 9. என். சோமசுந்தரம்
தமிழர் விடுதலைக் கூட்டணி
வன்னி மாவட்டம் 1. செல்வரட்ணம் சுதாகரன் (முதன்மை வேட்பாளர்) 2. மாணிக்கவாசகம் ரதிகுமார் 3. ஆறுமுகன் உதயசேகர் 4. கேசவன் சிவகுமாரன் 5. சபாரட்ணம் மைக்கல் கொலின் 6. பிள்ளை அம்பலம் ஜெகதீஸ்வரன் 7. மார்க்கண்டு மங்களராயன் 8. மோகனதாஸ் மகாதேவன் 9. ராசையா ஜெகமோகன்.