டென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள். சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.
30
30
அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கல்முனை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு சுற்று வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளியில் காணப்படும் நாணல்காடு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அப்பிரதேசம் நோக்கி நாலா புறத்திலிருந்தும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை ஆறு மணி தொடக்கம் குண்டுத் தாக்கதல் நடத்திய விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசம் ஆழம் கூடிய சகதியான சூழலைக் கொண்டுள்ளதால், தேடுதல் நடவடிக்கை முடிவடைய காலதாமதம் ஏற்படும் என அறிய முடிகிறது.
கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படும்போது கடந்த காலத்தில் இந்த நாணல்காட்டில் புலிகள் தங்கியிருந்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அதே பாணியில் இந்த நாணல் காட்டை தற்போது எஞ்சியுள்ள புலிகள் பயன்படுத்த எத்தனித்து வருவதாகவும், அதற்காகவே இப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இஸ்ரேலில் வடிவமைக்கப்பட்ட இந்த ரேடர் விமானம், ரஷ்யாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை கொண்டு 500 கி.மீ., தூரம் வரையில் கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்று தெரிகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி முறைப்படி விமானப் படைக்கு அர்ப்பணித்தார்.
மட்டக்களப்பு வாகரை இராணுவ முகாமில் எல். ரீ. ரீ. ஈ. இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். வாழைச்சேனை கொண்டையங்கேணி யைச் சேர்ந்த புகழேந்தி என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை அமரசிங்கம், வாகனேரியைச் சேர்ந்த ஹரன் என்றழைக்கப் படும் பரமக்குட்டி சாமுவேல், முள்ளிவட்டவானைச் சேர்ந்த ராகுலன் என்றழைக்கப்படும் செல்லப்பா சிவாநந்தன் ஆகியோரே சரணடைந்துள்ளவர்களாவர்.
இவர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள்- 3, கைக்குண்டுகள் -03, கிளேமோர் குண்டு-1, டெட்டனேட்டர்கள்-3 ஆகிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்துள்ளனர். வாகரை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவிக்கப் படுகிறது.