உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரா நெல், அரிசி மாபியாக்களுக்கு எதிராக ஒரு அரிசிப் போரை ஆரம்பித்து உள்ளார். இந்நிலையில் ஆளுநரின் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை டிசம்பர் 24 இல் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்கில் விளையும் நெல்லில் பெரும் பகுதியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அதிகரித்த கடன் வழங்கலுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

May be an image of 2 people, dais and textவடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதில்; ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். வடமாகாணம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் இதுவரை நெல் காயவிடுதல், களஞ்சியப்படுத்தல் வசதிகள் இங்கு இல்லை என்பதும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்தவுடனேயே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதையும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள், விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தவுடனேயே கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள். அத்துடன் இடைத்தரகர்கள் மூலமே பிரச்சினைகள் உருவாகுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையோ, கூட்டுறவு சங்கங்களோ ஈர நெல்லை கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் எனவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.  நெல் கொள்வனவுக்கான அறிவுறுத்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் வசம் உள்ள நெல் உலர விடும் தளங்களை தயார்படுத்த பணித்துள்ளதாகவும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்தார். அத்துடன் நெல்கொள்வனவுக்கு சங்கங்களுக்கு முற்கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்தார்.

அரசாங்கம் உள்ளூர் நெல் உற்பத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யும் அரிசியின் விலையை கிலோவுக்கு 220 ரூபாய்க்கு விற்கப் பணித்துள்ளது. இதன் மூலம் உள்;ர் உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அரிசியின் விலையை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்காமல் தடுத்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முயற்சிக்கின்றது. தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படக் கூடாது. புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும். “மொடர்ன் ஸ்லேவரி (modern slavery)” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முதற் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மலையகத் தமிழரான சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தோட்ட மற்றும் சமூகக் கட்டுமான பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு எடுத்து வருவதை பிரதி அமைச்சர் பிரதீப் சுட்டிக்காட்டியிருந்தார்.

யேசு பிறந்த நாளில் கிளிநொச்சியில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

யேசு பிறந்த நாளில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

May be an image of 2 people and people smilingகிளிநொச்சியில் நேற்று டிப்பர் மோதி 2வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். தாய், தந்தை மற்றும் 7 வயது மகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை முன்பாக நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மதுபோதையிலிருந்த டிப்பர் வாகன சாரதி மோட்டார் சைக்கிளில் குடும்பமாக வந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வருகின்றது. சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றார்கள். தென்னாசியாவில் இலங்கையின் வீதிகள் உயிராபத்தானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 24ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 25ஆம் திகதி காலை 6மணி வரையான 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டின் எப்பாகத்திலும் பாரிய விபத்து சம்பவங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டு அடுத்த 90 நிமிடத்தில் இவ்விபத்து ஒரு குழந்தையின் உயிரைப் பறித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரினால் விசேட  போக்குவரத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இவ்வாறு விதிமீறல்களுக்கு உட்படும் வேளையில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை ‘நிலையற்றவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபாவும் ‘பாதிப்புக்குட்பட்டவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும்  அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பால் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் பெரிதும் பயனடைவர். குறிப்பாக தமிழ்ப் பகுதிகளிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போரில் அங்கவீனமடைந்துள்ளவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு இது நன்மை கொடுக்கும். ‘வறியவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 9,60,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபாவும் ‘மிகவும் வறியவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4,10, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 8,20, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட போராளிகளான மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட ஒளிரும் வாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர் அனஸ்லி, “தேசிய மக்கள் சக்தி அரசு சரியான திசையில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் இந்த அதிகரிப்பு மிகச் சொற்பம்” எனத் தெரிவித்தார். “மாற்றுத் திறனாளிகளுடைய நிலை வானவில் போன்று பல நிலைப்பட்டது. இவர்களுடைய நிலையை ஆராய்ந்து அதற்கமைவாக விசேட திட்டங்களின் கீழ் அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள், அவர்களுக்கு உதவியாளர்கள், மற்றும் தேவயான உபகரணங்கள் வழங்க புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசும் முன்வரவேண்டும்” என்றும் அனஸ்லி தெரிவித்தார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

வடமாகாணத்தில் உள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் பிரச்சினையில், வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும், என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பகீரங்க அழைப்பு விடுத்துள்ளனர். கடல்தொழில் அமைச்சர் மீனவர்களுடைய பிரச்சினைகளை அணுகி, அதனை ஜனாதிபதிக்கும் கொண்டு சென்று, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இப்பிரச்சினை பேசப்பட்டது. ஆனாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகும்படி கோரியிருந்தார். அதற்கு மறுப்புச் சொல்லும் வகையில் 17 இந்திய மீனவர்களும் அவர்களுடைய மீன்பிடி படகும்; கைப்பற்றப்பட்டு, ஜனவரி ஏழவரை தடுத்தவைக்கப்பட்டு உள்ளனர். தண்டனைக்கூடாகவே இவ்விடயத்தை கையாளமுடியும் என வடக்கு மீனவர்களைப் போன்று இலங்கை அரசும் நம்புகின்றது.

ஆனால் வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் பற்றி பேச மறுக்கின்றனர். அதனாலேயே மீனவர்கள் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி இக்கோரிக்கையை வைத்தள்ளனர். வடக்கில் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் முகவர்கள் போல் செயல்படுவதால் மீனவர் பிரச்சினைகளில் இவர்கள் தலையீடு செய்வதில்லை. மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் சொத்துக்களும் உண்டு. அதுமட்டுமல்ல மாகாணசபை, 13வது திருத்தம் என்ற விடயங்களில் தமிழ் மக்களுக்கு கதையளப்பதற்கு இந்தியா இவர்களுக்கு அவசியமாகின்றது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி அரசு இல்லை எனத் தெரியவருகின்றது. தமிழ் தேசியத் தலைமைகளின் நண்பனாக எப்போதும் அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீடித்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு இவருடைய பதவியை நீடிக்க மாட்டாது எனத் தெரியவருகின்றது. அதனால் ஜெனரல் சர்வேந்திர சில்வா டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் கனடா சென்றுள்ள பா உ எஸ் சிறிதரன், கனடிய அரசு, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தொடர்ந்து நீதி கோரி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேற்குலகம் காஸாவில் தொடர்ந்தும் இனப்படுகொலை செய்வதை ஆதரித்துவரும் கனடா, தமிழ் மக்கள் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. கனடாவில் உள்ள 3,00,000 தமிழ் வாக்காளர்களுக்காக கனடா நீலிக் கண்ணீர் வடிக்கின்றதேயல்லாமல் அவர்களுக்கு மனித உரிமை பற்றி எவ்வித அக்கறை கிடையாது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு  திறந்துவைப்பு – Northern Provincial Council, Sri Lankaநடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து அப்பிரிவு இயங்கி வருகின்றது.

இவ் இருதய சிகிச்சை பிரிவானது ஆய்வு கூடம் (Cath Lab), கார்டியோ டோராசிக் ஆய்வுகூடம் (Cardio-thoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG, நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring), நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு (Ambulatory ECG monitoring) போன்ற நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இப்பிரிவு பல குறைபாடுகளுடன் ஒழுங்காக இயங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரேயொரு இருதய நோயியல் நிபுணருடன் இயங்கும் இப்பிரிவில் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அதனைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. இதேமாதிரியானவொரு நிலமையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. இதனால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாதி நிதிக்கு கட்டிடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

பல கோடி ரூபா செலவில் விபத்து அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டும், இறுதியில் ஜெனரேற்ரர் வசதியில்லாததால்,  சிகிச்சைகள் நடைபெறாது வருடக்கணக்காக பூட்டிக் கிடக்கிறது.  சாவகச்சேரியிலும் விபத்திற்குள்ளாகி வரும் நோயாளிகள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தென்னாசியர்கள் இருதய நோயினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஒப்பீட்டளவில் அதிகம். இந்தச் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இருதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் இருதய நோயைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றதத்துக்கு தெரிவாகியுள்ள கால்நடை வைத்தியர் திலகநாதன், தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகியுள்ள சத்தியலிங்கம் ஆகிய இருவரும்  வைத்தியத்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களோடு யாழில் இருந்து என்பிபி சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் சிறிபவானந்தராஜா, சுயேட்சையாக பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் இணைந்து, வவுனியா பொது வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை முறைப்படி இயங்க வைப்பதற்கான அழுத்தத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் பரோபகாரிகளை தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் அனுவரணையோடு அதனை வாங்குவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

可能是 4 個人、講臺和文字的圖像

அரச அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்திட்டங்களாலும் மற்றும் வினைத்திறனற்ற செயல்களாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அவ்வாறான பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி தண்டனைகள் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அது தான் அநியாமாக பலியாகிக்கிக் கொண்டிருக்கின்ற உயிர்களுக்கு நிவாரணமாகவும் ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” துன்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்போம் – ஜனாதிபதி அனுரா நத்தார் வாழ்த்து

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” துன்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்போம் – ஜனாதிபதி அனுரா நத்தார் வாழ்த்து

“துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை” என தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி, “இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன், மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தம், ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானத்தை மனதில் கொண்டு எதிர்வரும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுடனும் களிப்போம்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர்,  “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள், இந்த பண்டிகை காலத்தை தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிட முடியாதவர்களையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இது போன்ற வேளையில், உலகம் முழுவதும் பல்வேறு மோதல்கள் மற்றும் பேரழிவுகளுக்கு மத்தியில் சிறு குழந்தைகள் கூட இறக்கும் போது, அமைதியின் நம்பிக்கையின் ஏக்கங்கள் இன்னும் நம் இதயங்களில் உள்ளது. ஒரு குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை கிறிஸ்துமஸ் நமக்கு நினைவூட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நத்தார் தினத்தை ஏழைகளுடன் கழிப்பதற்கும் ஏழைகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு வாழக் கற்றுக்கொள்வதற்கும் நாம் தெரிவுசெய்ய வேண்டும்” என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “அதிகாரமும் செல்வமும் கடவுளின் பார்வையில் மதிப்பற்றவை. கடவுளின் செய்தியின்படி, அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான சூழலில் பிறக்க முடிவு செய்தார். சமுதாயம் ஒரு வரம் என்று நினைக்க பழகிக் கொள்ள வேண்டும். மனித வரலாறு முழுவதும் செல்வம் மற்றும் அதிகார பேராசையால் பலரின் வாழ்க்கை ஆதரவற்றதாகிவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு குறிப்பிட வேண்டும்” என அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு நான்கு பெண் கைதிகள் உட்பட 389 கைதிகள் நாடுபூராவும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகமே இந்தக்  கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடினாலும் யேசுநாதர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் பெத்தலகாமில் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை. சகோதரர்களான தங்கள் இனத்தைச் சார்ந்த பாலஸ்தீனியர்கள் காஸாவில் கொல்லப்படுகின்ற போது தாங்கள் எவ்வாறு இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை செய்வது என அங்குள்ள கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உலகம் யேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறது. அந்த யேசு பிறந்த மண்ணில் இஸ்ரேல் தினம் தினம் குழந்தைகளைப் பெண்களைப் படுகொலை செய்கின்றது.

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்?

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்? முதல் வழங்கப்பட்ட உறுதிமொழி மீண்டும் வழங்கப்பட்டது?
தம்பி தம்பிராஜா V ஊசி அர்ச்சுனா

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடல்த்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்திய – இலங்கைக் கடற்படையினரின் கூட்டு ரோந்து பற்றி இருநாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும் என சில மீனவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். சற்லைற்களைப் பயன்படுத்தி தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மீனவர்கள்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்த போது மீனவர் பிரச்சினை முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால், இலங்கையின் வடக்கு கடல்வளம் சீரழிந்து வருவதுடன் மீன்வளமும் மீனின் இனப்பெருக்க வட்டமும் சிதைந்து வருவதாக சூழலியலாளர்களும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.