அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

டெங்கு பரவும் 2000 வீடுகள் பொலிஸ்-இராணுவத்தால் சுற்றி வளைப்பு

aedes_aegypti.jpgமட்டக் களப்பு, காத்தான்குடி நகர சபைப் பிரிவில் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் ஆரம்பித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் 2000 வீடுகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்றும் இன்றும் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 600 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தினங்களுக்குள் தமது இருப்பிடங்களைத் துப்புரவு செய்யாவிட்டால் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதாரப் பணிமணை தெரிவித்துள்ளது

யாழ்குடாவுக்கு சாலை வழியாக அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம்

a-9-loorys.jpgஇலங் கையில் யாழ்குடா நாட்டிற்கு சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பத்து நாட்களுக்கு முன்பே கொழும்பிலிருந்து கிளம்பியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அவை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து வருகின்றன.

பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் கடந்த பல நாட்களாக அநுராதபுரத்தில் தடுத்துவவைக்கப்பட்டிருந்தன. தற்போதுதான் கட்டம் கட்டமாக இந்தப் லாரிகள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றன.

காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது

இலங் கையின் கிழக்கே மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில முஸ்லிம் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்டப்டிருப்பதாகக் கூறப்படும் சட்ட விரோத ஆயுதங்களை களைவதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க இதனை அறிவித்துள்ளார். ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இரு குழுக்கள் – சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் தலைமையில் நியமனம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐ.ம.சு. முன்னணி சார்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் தலைமையில் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி பதுளை மாவட்டத்துக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையின் கீழ் ஒரு குழுவும் மொனராகலை மாவட்டத்துக்கு மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு குழுக்களிலும் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.பி.க்கள்,  முதலமைச்சர்கள் ஆகியோரும் அடங்குவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தமிழர்கள் பற்றி எமக்குக் கவலையில்லை: அனுர பிரியதர்சன யாபா

anura_priyadarshana_yapa_1806_press.jpgபுலம் பெயர் தமிழர்கள் பற்றி எமக்குக் கவலையில்லை எனவும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

கடல் கடந்த ஈழ இராச்சியம் குறித்தோ அதனை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தரணி உருத்திர குமார் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெறவேண்டும்: விஜயகாந்த்

vijayakanth.jpgஇலங்கை விவகாரம் தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைப்பதைப்போல சிங்கள ராணுவ காவலில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்களும், அங்குள்ள மனிதாபிமானிகளும் தங்களால் இயன்ற உதவி பொருட்களை சேர்த்து மெர்சி மிஷன் என்ற கப்பல் மூலம் அவசர உதவிக்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். சில ஆவணங்கள் சரியில்லை என்று வேண்டுமென்றே சாக்குபோக்கு சொல்லி இந்த நிவாரண கப்பலுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது.

இந்த நிவாரண கப்பல் இன்னும் நடுக்கடலிலேயே காத்துக்கொண்டுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு இந்திய அரசின் மூலம் நடுக்கடலில் நிற்கும் நிவாரண கப்பலை இந்திய துறைமுகத்தில் உணவு, மருந்து பொருட்களை இறக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். பிறகு அவற்றை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய தூதரின் மேற்பார்வையில் வினியோகிக்க வேண்டும்.

முகாம்களில் திறந்த சிறைச்சாலையை விட மோசமான நிலையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உணவு மற்றும் சுகாதார வசதியில்லாததால் தினந்தோறும் செத்து மடிகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழர்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிவகை காணவேண்டுமென்றும் சிங்கள அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் அலி (வணங்காமண்) நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும் – கருணாநிதி

vanangaaman-captainali.jpgஇலங் கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனுப்பிய உதவிப் பொருட்களுடன் வந்த கப்பலில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்ததை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துக் கொடுக்கவுள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் காயமடைந்தும், வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் ராணுவம் அமைத்துள்ள திறந்த வெளி முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பெண்களிடம் ராணுவ வீரர்கள் முறைகேடாக நடப்பது, இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொல்வதுமாக கொடுமைகள் நடந்து கொண்டுள்ளன. இந்த மக்களுக்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் இந்தக் கப்பல் இப்போது இந்திய கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில்,

பாதிப்புக்கு உள்ளான மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச சமுதாயம் நிவாரணப் பொருட்களை அளிப்பது வழக்கம். இதை தடுப்பது மனிதாபிமானமல்ல. எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அந்தக் கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அமைச்சர் பொன்முடி டெல்லிக்கு விரைந்து அதை நேரடியாக கிருஷ்ணாவிடம் வழங்கவுள்ளார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்தும் இன்று காலை கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புத்திமதி கூறுவதை விட உதவி செய்வதே பிரித்தானியாவின் கடமை -நெஸ்பி பிரபு தெரிவிப்பு

nasby.jpgஇலங்கை அரசாங்கத்துக்கு புத்திமதி கூறுவதை விடுத்து உதவிகளைச் செய்வது பிரித்தானியாவின் கடமையாகும் என அந்நாட்டின் சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரும் பிரபுக்கள் சபையின் சிரேஷ்ட உறுப்பினருமான நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பிரித்தானியா அர்த்தமுள்ள வகையில் தனது வளங்களைக் கொடுத்து இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற வலுவான குணாதிசயங்களைக் கொண்ட ஒருவரால்தான் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ளக் கூடிய தெளிவானதொரு மூலோபாயத்தை வகுத்து அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்றும் அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை-மாலைதீவு ஜனாதிபதிகள் இன்று அநுராதபுரத்தில் சந்திப்பு!

moldivian-president.jpgஇலங் கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுப் பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்தார்.

இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்களுக்கு கிஷோர் சென்றார்

kishore.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று வியாழக்கிழமை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்குச் சென்றார். சகல நலன்புரி நிலையங்களுக்கும் இவர் சென்று நிலைமைகளை அவதானித்ததாக செட்டிகுளம் நலன்புரி நிலைய பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். அத்துடன், செட்டிகுளம் மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் இவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னி எம்.பி. வினோநோகராதலிங்கம் முன்னர் ஒரு தடவை நலன்புரி நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதாக கிஷோர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த நிலையில், இவர் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டார்