ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐ.ம.சு. முன்னணி சார்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் தலைமையில் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி பதுளை மாவட்டத்துக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையின் கீழ் ஒரு குழுவும் மொனராகலை மாவட்டத்துக்கு மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு குழுக்களிலும் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.பி.க்கள், முதலமைச்சர்கள் ஆகியோரும் அடங்குவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.