இலங்கை அரசாங்கத்துக்கு புத்திமதி கூறுவதை விடுத்து உதவிகளைச் செய்வது பிரித்தானியாவின் கடமையாகும் என அந்நாட்டின் சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரும் பிரபுக்கள் சபையின் சிரேஷ்ட உறுப்பினருமான நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பிரித்தானியா அர்த்தமுள்ள வகையில் தனது வளங்களைக் கொடுத்து இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற வலுவான குணாதிசயங்களைக் கொண்ட ஒருவரால்தான் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ளக் கூடிய தெளிவானதொரு மூலோபாயத்தை வகுத்து அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்றும் அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.