புலம் பெயர் தமிழர்கள் பற்றி எமக்குக் கவலையில்லை எனவும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
கடல் கடந்த ஈழ இராச்சியம் குறித்தோ அதனை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தரணி உருத்திர குமார் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தன்
ஓ..இன்னும் நீங்கள் தமிழருக்கு உரிமை வழங்கேல்லையோ. எல்லா உரிமையும் இருக்கு எண்டு எல்லோ கதைச்சனியள் இவ்வளவு நாளும்.இதில நம்மட ஆக்களும் ஒத்து ஊதினவை! அதோட உங்கட தலைவர் சிறுபான்மை இனமே இல்லை ஒன்லி ஸ்ரீலங்கன் தான் எண்டு பன்ச் டயலக் அடிச்சாரே. அப்பிடிப்பாத்தா எல்லாருக்கும் ஒரே உரிமைதானே இதில என்ன ஸ்பெசல் தமிழர் உரிமை?
அது சரி புலம்யெர்ந்த தமிழரை மஹிநதா வருந்தி அழைச்சாரே ஒரு மாதம் முன்னாடி. எம்பசியளில கட்டுமான நிதிக்கு காசு குடுக்கச் சொல்லி கோல் அடிக்கினம் அண்ணை! யாழ்தேவி மீண்டும் வரும்..மீண்டு வரும் கவிதைத்தனமான கதையள் (எங்கட ஆக்கள் எழுதிக்குடுத்ததை) ….காசுதாங்கோ …ஆளுக்கொரு சிலிப்பர்கட்டையை தத்தெடுங்கோ எண்டெல்ல்லாம் கஸ்ரப்பட்டு போனில வாசிக்கினம் அண்ணை! ஒருதரும் குடுக்கேல்லை…அதால இந்தப்பழம் புளிக்கும்!