அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தன்சானியாவில் ஷியாம்லால் கொலை செய்யப்பட்டுள்ளார்-ஐ.நா.வின் பேச்சாளர் தகவல்

தன்சானியாவின் அருஷா நகரில் அண்மையில் தமது வீட்டில் இறந்துகிடக்க காணப்பட்ட ஷியாம்லால் ராஜபக்ஷ, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனான ஷியாம்லால் இறக்கும் போது ருவாண்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் விசாரணை சபையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம் குறித்து, தன்சானியா, இலங்கை ஆகிய இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று மொன்ராஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இன்னமும் அறிவிக்கப்படாததால் விசாரணை முடிவுகள் பற்றிய விபரங்களை தம்மால் வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டுக்கு 21 கோடி – வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 21 கோடிக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். முதல்கட்டமாக யாழ் மாவட்டத்தில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படாத 19 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய 9 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 219.861.198 ரூபாவை ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதிகரிக்க 43 மில்லியன் ரூபாவையும் சுகாதார மத்திய நிலையங்களை நவீனமயப்படுத்த 13 மில்லியன் ரூபாவையும் உள்ளக விiயாட்டரங்கொன்றை அமைக்க 12 மில்லியனையும் கைலாசபதி கேட்போர் கூடத்தை குளிரூட்டி வசதிகளுடன் நவீனமயப்படுத்த 10 மில்லியனையும் அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய 8 மில்லியனையும் ஒதுக்கியுள்ளதாக மேலம் தெரிவிக்கப்படுகிறது.

மீள்குயேற்றத்தின் பின்னரான தேர்தல்களே மக்கள் ஆணையை பெற்றவையாக அமையும்:ரவூப் ஹக்கீம்

எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பின் இத் தேர்தல்கள் இடம்பெறுமாயின் அது நீதியானதும், நேர்மையானதும் மக்கள் ஆணையைப் பெற்றதுமான தேர்தலாக அமையுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களை மிக விரைவாக சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என ஜனாதிபதியும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர். நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

யாழ் தீவகற்பத்திலிருந்து விடுதலை புலிகள் வெளியேறும் போது அவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விரைவாக மீள்குடியேற்றப்படின் இப்பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக ஒழுங்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும். எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே இடம்பெயர்ந்த இம்மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படின் அது நீதியான மக்கள் ஆணையைப் பெற்ற தேர்தலாக அமையும்.

அதேவேளை சமாந்தரமாக ஏறத்தாழ 20 வருடங்களிற்கு முன் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றத்தில் ஆர்வமாக காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கை காட்டுவதாக நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்ததன் பின்னணியில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் 14 பஸ்களில் 450 குடும்பங்களை அழைத்துச் சென்று முஸலி பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தொட்டம் தொட்டமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இது உண்மையில் அப்பகுதியை பார்த்துவருவதற்கு சென்ற மக்களை கூடாரங்களை அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள முயற்சியானது அம்மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருகிறது. அங்குள்ள பாதுகாப்பு தரப்பைச் சார்ந்த அதிகாரிகள் அம்மக்களை வெளி இடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப் பாஸ் நடைமுறை அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிற்கு காணப்படுவதில்லை, தமக்கு மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதை விட அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதார பிரச்சினை குறிப்பாக கடற்படையினர் மீனவர்களுக்கு கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை.தற்போ மீன் பிடிப்பதற்கு உகந்த காலமாதலால் சிலாவத்துறை , முஸலி பிரதேச மீனவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.எனினும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

வாழ்வாதாரத்திற்காக மீள்குடியேற்றத்தை விரும்பும் ஆண்களையாவது அங்கு சென்று விவசாயம், கடற்றொழில் செய்வதற்கான உரிமைகளையும், அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அம்மக்கள் ஊக்கத்துடன் காணப்படுவர்.வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெறும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்கின்றனர்.எனவே அதிகாரிகள் மக்களுடனான தொடர்பாடலில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்க வேணுமென நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

அதேவேளை மிகப்பெரிய முகாம்கள்,பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மீளக்குடியேறப் போகின்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது தமது சொந்த வதிவிடங்களை தாம் இழக்க நேரிடும் என அச்சத்துடன் விசனம் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிலாவத்துறையில் மக்கள் வாழ்ந்த இடங்களி சுற்றி வளைத்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவிற்கு அண்மையில் சென்ற பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்க்ளில் பூர்வீக இடங்களை எவ்வாறு விரைவாக கையளிப்பது என இடம்பெயர்ந்த மக்களிடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் திருகோணமலை பிரதேசம் வெருகல் பகுதியில் உப்பூறல் பகுதியில் அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் 70 முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் சென்றார். 5 நாட்களின் பின் ஈச்சிலாம்பற்று பிரதேச செயலாளர் அங்கு சென்று அம்மக்களிடம் மீள் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படவில்லை,இதில் பல பிரச்சினைகள் உள்ளது எனத் தெரிவித்து மீண்டும் அழைத்து வந்தார்.இது ஓர் அடிப்படை உரிமைப் பிரச்சினை.

எனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் கூட பிரச்சினைகள் காணப்படுவதால் எதிர்காலம் முறித்த எதிர்பார்ப்புகளிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இனங்களுக்கிடையேயான உறவு சம்பந்தப்பட்ட விடயத்தில் மிகக் கவனமாகவும், தூரநோக்குடனும் செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்ப்டையில் இவ்விடயத்தில் நாம் தமிழ் தலைமைகள் உணர்வு பூர்வமாகவல்லாது நியாய பூர்வமாக சிந்தித்து சொற்பமான இம் முஸ்லிம் குடுமபங்களின் மீள் குடியேற்றத்தை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

sri-lankan-students.jpgநடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 23 மாவட்டங்களில் 25 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இப்ணியில் சுமார் 10.000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். கூடிய விரைவில் பரீட்சை பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 77வது பலி

10092009.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.

இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன

செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்!

edward-kennedy-democrat.jpgஅமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008  ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.

இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாதயாத்திரை!

0000sri-lanka-map.jpgஇலங் கையின் தென் முனையான மாத்தறையில் இருந்து வட முனையான பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரை ஒன்றை சாரணர்கள் மூவர் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பமானது.  பி.எல்.ஹசன் சணங்க,  காந்த குணவர்த்தனா,  பிரசாத் மஞ்சுல ஆகிய மூவர்களே இந்த பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து யாழ்-கண்டி வீதி ஊடாக பாத யாத்திரையாக யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பர்த்தி செய்வர். முழுத்தூரத்தையும் 22 நாட்களுள் நடந்து முடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் மத நிலையங்களிலும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் இவர்கள் தங்குவர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. 

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள இந்து மத குருமாருக்கு மாற்று ஏற்பாடு

IDP_Camp_Aug09வவுனியா – செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் உள்ள இந்து மத குருமார்களுக்கு இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதையடுத்து, நேற்றைய தினம் நிவாரண கிராமங்களிலிருந்த மத குருமார்களை இராணுவத்தினர் வவுனியாவுக்கு அழைத்து வந்தனர். இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 218 இந்து மதகுருமார்கள் அவர்களின் குடும்பத்தவர்களுடன் சுமார் 700 பேரை பொறுப்பெடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் முன்வந்துள்ளது.

இதற்கு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மத்தியஸ்தம் வகித்துச் செயற்படுகின்றது.  முகாம்களில் இருந்து வெளிக்கொணரப்படும் மத குருமார்களை வவுனியா – கோயில்குளம் சிவன் ஆல யத்திலும், சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலும் தற் காலிகமாகத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

இந்து மதகுருமாரைப் பொறுப்பேற்கு முகமாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தலைமையிலான குழுவினர் இன்று வவுனியா செல்கின்றனர். இதேவேளை, கிறிஸ்தவ பாதிரியார்கள் 6 பேருக்கும் இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மஸ்கெலியா யுவதிகளின் சடலங்களை தோண்டியெடுக்க மஜிஸ்திரேட் உத்தரவு

girl2222.gifகொழும்பில் மரணமான, மஸ்கெலியா தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார்.

யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மலையக சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்தே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி என்ற இரு யுவதிகள் கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்களாகக் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 16 ம் திகதி பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவர்களது சடலங்கள் மஸ்கெலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே கண்டி மனித உரிமைகள் அமைப்பின் நெறிப்படுத்தலில், மலையக சமூக அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்தன.

இடம்பெயர்ந்தோரை அபிவிருத்தியில் பங்கேற்க செய்வதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

pr-mahi.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களை நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கம் அம்மக்களுக்கான உணவு, மருந்து உட்பட சகல தேவைகளையும் அன்றாடம் நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்களை மீளக் குடியமர்த்தி அப்பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும் நிதிச்செலவு ஏற்படும் எனினும் இது நாம் செய்ய வேண்டிய செலவுகளே. இத்தகைய செலவுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு.

எவரிடமும் கடன்படாமல் எமது வருமானத்தைக் கொண்டே இத்தகைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

அரசாங்கத்தின் நிதிக்கொள்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கடன் வழங்கியது. இதற்கு முன் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களைப் போன்று நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாம் கடன் பெறவில்லை. எம்மிடம் ஒரு காத்திரமான நிதிக்கொள்கை உண்டு. அதேவேளை, உலகிலேயே பாரிய நிவாரணங்களை வழங்குவது இலங்கை மட்டுமே. விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரம் வழங்கியது எமது அரசாங்கமே.

உலகின் பாராட்டைப் பெற்ற இலவச மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்தும் தடையின்றி வழங்குவதுடன் நாட்டில் 16 பேருக்கு ஒருவர் அரச ஊழியர் என்ற பெருமையைக் கொண்டவர்களும் நாமே.

இவையனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி அவசியம். முன்னர் தேசிய வளங்களை விற்றல், மது, புகையிலை வர்த்தகம் என்பன மூலம் வரு மானங்களைப் பெற்ற காலம் இருந்துள்ளது. நாட்டிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படினும் அரசுக்கு இது போன்ற வருமானங்கள் ஈட்டப்பட்டன.

அத்துடன் நாட்டிற்குப் பொருத்தமற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே சர்வதேச கடன்கள் பெறப்பட்டன. எனினும் நாம் அபிவிருத்தியை மட்டுமன்றி தேசிய வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றோம். நாம் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமன்றி நாட்டைப் புதிய பாதையில் இட்டுச் செல்கிறோம்.

நாட்டின் வருமானத்தில் 50 வீதம் சுங்கத் துறையிலிருந்தே கிடைக்கின்றன. அது மட்டுமன்றி நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதிலும் மேலும் பல்வேறு துறை அபிவிருத்திகளிலும் சுங்கத்துறையின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது.

கடந்த நான்கு வருடகாலத்தில் அரச வருமானம் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நாட்டின் அபிவிருத்தியோடு நாம் கொண்டுள்ள நிதிக்கொள்கையும் தான். வரி மூலமான வருமானம் முக்கியமானது. அதுவே நாட்டின் பொருளாதாரத்திற்கான பலமாகும். இந்த வகையில் சுங்கத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு மிக முக்கியமாகும்.

சுங்கத் துறையினருக்கு வேறு எந்தத் துறையிலுமில்லாத வருமானம் கிடைக்கிறது. மோசடி ஒன்றைக் கண்டுபிடித்தால் அதன் 50 வீதம் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. வீடு, வாகனம் என சிறந்த நிலைமையில் அவர்கள் வாழ்கின்றனர். எனினும் எத்தகைய சொத்துக்கள் இருந்தாலும் நமக்கான நாடு ஒன்று முக்கியம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்நாட்டின் பொது வளர்ச்சியே தனிப்பட்டவர்களின் வளர்ச்சியாகிறது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படவேண்டும். சுங்கத் துறையில் சிலர் செயற்படும் விதமே முழு துறையையும் அபகீர்த்திக்குள்ளாக்கு கிறது. பொலிஸ் துறைக்கும் இது பொருந் தும். இத்துறைகளின் மீது மக்கள் கொண் டுள்ள அபிமானத்திற்கு இத்தகையோரின் செயற்பாடுகள் குந்தகத்தையே ஏற்படுத்தும்.

நாட்டில் அபிவிருத்திக்கு சுங்கத் துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. சுங்க அதிகாரிகளுக்கு இதற்கான பொறுப்புமுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது பல கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன. இவை பொருட்களுடன் அங்கு கொண்டு செல்லப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. இவை தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஆகாய மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டனவா என்பதல்ல பிரச்சினை. அதற்குரிய ஆவணங்களையும் தேடிப் பிடிக்க முடியாது.

எனினும் நாம் கூறுவதெல்லாம் சுங்க அதிகாரிகள் தமக்குரிய சமூகப் பொறுப்பை சரிவர நிறைவேற்றினார்களா என்பதே. இது அவர்களை அவர்களே கேட்க வேண்டிய கேள்வி. நாம் எந்த யுகத்தில் உள்ளோம் என்பதைச் சிந்தித்து ஏனைய துறையினரை விட மேலான சேவையை வழங்குபவராக சுங்க அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

சுங்கம் இல்லாதொழிக்கப்பட கங்கணம் கட்டிய காலம் ஒன்றிருந்தது. அதற்காக சிலர் செயற்பட்டனர். நாட்டை நேசிக்கும் சிலராலேயே இது தடுக்கப்பட்டது. அதனால் தான் இன்று நாம் சுங்கத் துறையின் 200 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

தேசிய வருமானத்தைக் கருத்திற்கொண்டு நேர்மையுடனும் அர்ப் பணிப்புடனும் உழைக்க வேண்டியது சுங்கத் துறையினரின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.