பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.
இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன