அமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.
இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.
கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.