இலங் கையின் தென் முனையான மாத்தறையில் இருந்து வட முனையான பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரை ஒன்றை சாரணர்கள் மூவர் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பமானது. பி.எல்.ஹசன் சணங்க, காந்த குணவர்த்தனா, பிரசாத் மஞ்சுல ஆகிய மூவர்களே இந்த பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து யாழ்-கண்டி வீதி ஊடாக பாத யாத்திரையாக யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பர்த்தி செய்வர். முழுத்தூரத்தையும் 22 நாட்களுள் நடந்து முடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் மத நிலையங்களிலும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் இவர்கள் தங்குவர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.