வவுனியா – செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் உள்ள இந்து மத குருமார்களுக்கு இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதையடுத்து, நேற்றைய தினம் நிவாரண கிராமங்களிலிருந்த மத குருமார்களை இராணுவத்தினர் வவுனியாவுக்கு அழைத்து வந்தனர். இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 218 இந்து மதகுருமார்கள் அவர்களின் குடும்பத்தவர்களுடன் சுமார் 700 பேரை பொறுப்பெடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் முன்வந்துள்ளது.
இதற்கு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மத்தியஸ்தம் வகித்துச் செயற்படுகின்றது. முகாம்களில் இருந்து வெளிக்கொணரப்படும் மத குருமார்களை வவுனியா – கோயில்குளம் சிவன் ஆல யத்திலும், சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலும் தற் காலிகமாகத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
இந்து மதகுருமாரைப் பொறுப்பேற்கு முகமாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தலைமையிலான குழுவினர் இன்று வவுனியா செல்கின்றனர். இதேவேளை, கிறிஸ்தவ பாதிரியார்கள் 6 பேருக்கும் இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.