எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரபாகரனை காப்பாற்ற விமானநிலைய மலசல கூடத்தில் கலந்துரையாடல்

Selvarasa_Pathmanathan_LTTEஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளதாக இன்றைய சிங்கள பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் இருப்பதாக கருதப்படும் கே.பி.யுடன் தொடர்பு கொள்வதற்காக வேண்டி நம்பியார் தேர்ந்தெடுத்த இடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடமென்றும் இப்பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுத கடத்தல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சர்வதேச இரகசிய  பொலிஸாரினால் (இன்டர்போல்ட்) தேடப்பட்டு வரும் கே.பி. தாய்லாந்திலிருந்து திருட்டுத்தனமாக மலேசியாவினுள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  இப்படிப்பட்ட ஒரு நபருடனேயே ஐ.நா.வின் பிரதிநிதி இரகசியமாக தொடர்புகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி இலங்கையிலிருந்து வெளிவரும் முக்கிய தினசரிகளில் ஒன்றான திவயினவில் முதல் பக்க செய்தியாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் பலி – பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

breaking-news.jpgஇன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார். 

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார். இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸிலும்   கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பா. நடேசன் தமிழ்ச் செல்வனின் மறைவினையடுத்து அவர் வகித்துவந்த பதவியை வகித்து வந்தார். விடுதலை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

புலிகளின் தாக்குதல் முறியடிப்பு

SL_Army_in_Final_Phaseகரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை உடைத்துக்கொண்டு நுழைய முனைந்த விடுதலைப் புலிகள் மீது இராணுவத்தினர் 04, 19ஆவது படையணிகள் தாக்குதல்களை நடத்தி வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 50க்கும் அதிகமான புலிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை 1.00மணியிலிருந்து சுமார் 6.00மணி வரை பலத்த தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது அனைத்து இனங்களினதும் வெற்றியாகும்.

mili.jpgகடந்த 30 வருடங்களாக இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது இலங்கை மக்களின் வெற்றியாகும் என ஜே.வி.பி. பிரசார செயலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி சிங்களவர், தமிழர்,  முஸ்லிம்கள்,  பேக்கர், மலே ஆகிய அனைத்து இனத்தினதும் வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

புலிகளின் தோல்விக்கு சீன ஆயுதங்களே காரணம் – ஐரோப்பாவில் இயங்கும் புலிகளின் இணையத்தளம் தகவல்.

smoke_.jpgவிடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட கனரக ஆயுதங்களே மூல காரணம் என புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பா இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்திக் கொண்டாலும்கூட, சீனா இரகசியமாக இலங்கைக்கு கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளம் முல்லைத் தீவு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது. இத்தகவலை திவைன பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத சாபம் முடிந்துவிட்டது – ஆனந்தசங்கரி

இலங்கையை இதுகாலவரை அச்சுறுத்திவந்த பயங்கரவாதம் எனும் சாபம் முடிந்துவிட்டது. இது அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமாகும். இருப்பினும் பயங்கர யுத்தத்தின் காயங்களை குணப்படுத்த பல மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லும் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரபாரனின் மகன் சால்ஸ் அந்தோனியின் சடலம் கிடைத்துள்ளதாக அறிவிப்பு

charles_anthony.jpgஇன்று அதிகாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார சற்று முன்பதாக அறிவித்திருந்தார்.

 அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் காலமானார்.

alu.jpgமுன்னாள் அமைச்சரும், சிரேஸ்ட அரசியல்வாதியுமான மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எலிக் அலுவிகார நேற்று (17) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

82வயது நிரம்பிய இவர் நான்கு மகன், ஒரு மகளின் தந்தையாவார். இவரின் மகன்மார்களுள் ரன்ஜித் அலுவிகார தற்போதைய மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த அலுவிகார மாகாணசபை உறுப்பினராகவும், சல்ஜித் அலுவிகார மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், சகத் அலுவிகார தோட்ட அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றனர்.  

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

parliament.jpgநேற்று (17) இரவுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உள்ளடக்கிய வர்த்தமானி நேற்று நல்லிரவு அச்சாகுவதற்கு இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (19) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் உரையுடன் பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.

தமிழருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படாதவரை போர் முடிவடைந்ததாகக் கருதிவிட முடியாது -ஜோன் ஹோம்ஸ்

waroooo.jpgஅரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர் களுக்குச் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் போர் முடிவடைந்து விட்டதாகக் கருதமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததவை  வருமாறு: இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என அரசுஅறிவித்துள்ள போதிலும் அவர்களின் கெரில்லா தாக்குதல் தொடரக் கூடும். சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர் காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் யுத்தம் முடிவடைந்ததாகக் கருத முடியாது. அரசுயுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்பதே ஐக்கிய நாடுகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது  என்றார்.