இன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார். இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸிலும் கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பா. நடேசன் தமிழ்ச் செல்வனின் மறைவினையடுத்து அவர் வகித்துவந்த பதவியை வகித்து வந்தார். விடுதலை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது