விஸ்வா

விஸ்வா

யாழ்பாணத்தில் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றம் அபராதம்.

mos.jpgசுற் றாடலைத் தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருந்ததாக யாழ்ப்பாணம் கூட்டுறவுச்சங்கம் (யாழ்கோ) கல்வியங்காடு பகுதியிலுள்ள ஓர் உணவகம், ‘ஜவ்னா றெஸ்ட்’ என்கிற மதுபானச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொண்டாவில் டிப்போ ஆகியவற்றிற்கு எதிராகவே வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் இவர்களின் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியிருந்தனர். ஆனால். இக்கால அவகாசத்திற்குள் அவர்கள் அதனைச் செய்யத் தவறியதால் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் தலா பத்தாயிரம் ருபா அபரத்தையும் விதித்தது.

Oct 14 2010 இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் யாழ். மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அதி கூடிய அபாராதம் எனபது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கல்முனையில் சட்டவிரோத ஆயுங்களை ஒப்படைக்க கால அவகாசம்.

Arms_Amnestyகிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பாதகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத அயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்போர் கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியற்றினூடாக அவற்றை ஒப்படைக்குமாறு பொலிஸாhரால் கோரப்பட்டுள்ளது.

Arms_Amnestyமுன்னர் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக சட்விரோத ஆயுத்ங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இதனால், இதன் கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கிளிநொச்சி கிராமப்புற மக்களே அதிகம் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்!

Psychologyகிளி நொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் உளநலன் பாதிக்கப்பட்ட மக்களில் 60 சதவீதமானவர்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என கிளிநொச்சி பொது மருத்துவமனை உளநல பொறுப்பதிகாரி மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட மனநோயாளிகளில் 40 வீதமானோர் கிளிநொச்சி நகரையண்டியுள்ள கிளிநொச்சி, கனகபுரம் பாரதிபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் முதலான இடங்களில் வாழ்கின்றனர். 60 வீதமானோர் வசதி குறைந்த கிராமங்களான பூனகரி, முழங்காவில், தருமபுரம், வட்டக்கச்சி, பளை ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள 200 பேருக்கும் மேல் கிளிநொச்சி மருத்தவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles:

அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு

வடமாகாணத்தில் 30 தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்க நிறுவனங்கள் தயார்:

இலங்கையின் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை அமைக்க 30 அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வருவதாக அமெரிக்க தெற்காசிய பிராந்திய வர்த்தக கட்டமைப்பின் பிரதிநிதி மைக்கல் டெலணி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களின் தொகை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வடமாகாணத்தின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று செவ்வாய் கிழமை அமெரிக்க முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனும் யாழ்ப்பாண பொதுமக்களுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது. அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கும் இலங்கையின் வெற்றிக்காக அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்கும் போது பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் காணாமல் போன சிறுவர் சிறுமிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 639 சிறுவர் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பெற்றோரை விட்டுப் பிரிந்தும் பெற்றோரை இழந்தும் உள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெற்றோர், உறவினர்களின் முறைப்பாடுகளை அடுத்து 13 சிறுவர்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டில்.

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகளை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வந்துள்ளது. இவ்வகையில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இராசாயனக் கூட்டுத்தாபனம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை என்பனவற்றை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை புனரமைக்கும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெறும் கைத்தொழில் கண்காட்சியில் யாழ்.பிரதிநிதிகள்:

சீனாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் துறையைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இக் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று புதன்கிழமை பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சீனாவின் ஹட்டன நகரில் எதிர்வரம் 15அம் திகதி தொடக்கம் 21அம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பெறப்படும் அறிவு, அனுபவத்தினூடாக யாழ். மண்ணில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே தமது நோக்கம் என இங்கிருந்து இக்கண்காட்சியில் கலந்து கொள்ள செல்லும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உடையார்கட்டில் புலிகளின் விமானக் குண்டுகள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குளக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நிலத்தடி பதுங்குகுழி ஒன்றிற்குள்ளிருந்து புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. புலிகளின் வான்படைப் பிரிவிற்குச் சொந்தமான 75 கிலோ, 50 கிலோ நிறைகளையுடைய 11 விமானக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு அடி நிளம், இரண்டரை அடி அகலம் கொண்ட நான்கு விமானக் குண்டுகளும், அதே அளவையுடைய 50 கிலோகிராம் எடையுள்ள ஏழு விமானக் குண்டுகளும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் இலகு ரக விமானத்தில் இத்தகைய குண்டுகளையே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடைவ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க பலருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் பிரஜைகள் குழுத்தலைவர் கதிர் பாரதிதாசன் நல்லிணக்க ஆணைக்கழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்.

விசுவமடுவில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. மேல் விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்குவதாக கூறிய நீதவான் நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கிளிநொச்சி விசுவமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சில நாட்களின் பின்னர் வீட்டில் தனியாகவிருந்த இரு பெண்கள் மீது பாலியல் வல்லறவு புரிந்ததாக நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது சகோதரன், பெண்ணின் பத்து வயது மகன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.