::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வாக்குச் சாவடிகளுக்குள் கமரா, தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

srilanka-voting.jpgவாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா, புகைப்பட கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை எடுத்துச் செல்வதும் பாவிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா மற்றும் புகைப்படக் கமரா என்பனவற்றைப் பயன்படுத்தி படம் எடுப்பதற்கும் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் ஆயுதங்களுடன் எவரும் வாக்கு சாவடிகளுக்குள் பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலையொட்டியே தேர்தல் ஆணையாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார். இதேநேரம் வாக்காளர்கள், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள், அபேட்சகர்கள், கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ. வி. அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொலிஸார், தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருப்போர் போன்றோரைத் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சிகளின் செயலர்களுடன் தேர்தல்கள் ஆணையர் சந்திப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை (2) தேர்தலில் போட்டியிடும் கட்சிக ளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் வன்முறைகளை தடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாள அட்டை தொடர்பில் முகம் கொடுக்கும் பிரச்சினை என்பன குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று (29) இடம்பெற்றன. வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்றதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிரி தெரிவித்தார்.

இதேவேளை, தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்பு இன்றும் (30) இடம்பெற உள்ளது. இரு தினங்களிலும் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு இந்த வாரத்திற்குள் வேறொரு தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

இன்று தபால் மூல வாக்களிப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

விடுமுறை தினத்திலும் வாக்காளர் அட்டை விநியோகம்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்றும் (27) வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வாக்காளர் அட்டை விநியோகம் ஒக்டோபர் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

தென் மாகாண சபைக்கு 55 பேரை தெரிவு செய்ய 1091 வேட்பாளர் போட்டி

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1091 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 2 போனஸ் ஆசனம் அடங்கலாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

காலி மாவட்டத்தில் 15 கட்சிகளிலும் 4 சுயேச்சைக் குழுக்களிலுமாக 494 வேட்பாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 14 கட்சிகளிலும் மூன்று சுயேச்சைக் குழுக்களிலுமாக 357 வேட்பாளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 கட்சிகளிலும் ஆறு சுயேச்சைகளிலுமாக 240 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதில் காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டையில் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலி மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தல்களுக் கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து நேற்று (28) நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் செயலகம் இன்று அறிவிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.  இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பனவும் இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தென் மாகாண சபைக்கு காலி மாவட்டத்திலிருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து 18 பேரும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து 12 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தென் மாகாண சபை தேர்தல் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. வேட்பு மனுத் தாக்கல்

election_fingercolur.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்,  ஐக்கிய தேசியக் கட்சியும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. மக்கள் விடுதலை முன்னணி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை நேற்று சமர்ப்பித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருக்கின்றது. அதேநேரம்,  இம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவுற்றது.

இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சை குழுக்களும்,  மாத்தறை மாவட்டத்தில் பத்து அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சைக் குழுக்களும், காலி மாவட்டத்தில் எட்டு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேவேளை,  இம்மாகாண சபைத் தேர்தலுக்காக இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.