தென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை (2) தேர்தலில் போட்டியிடும் கட்சிக ளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் வன்முறைகளை தடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாள அட்டை தொடர்பில் முகம் கொடுக்கும் பிரச்சினை என்பன குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.