தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.