தென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று (29) இடம்பெற்றன. வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்றதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிரி தெரிவித்தார்.
இதேவேளை, தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்பு இன்றும் (30) இடம்பெற உள்ளது. இரு தினங்களிலும் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு இந்த வாரத்திற்குள் வேறொரு தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.