தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி, ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பனவும் இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தென் மாகாண சபைக்கு காலி மாவட்டத்திலிருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து 18 பேரும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து 12 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.