தமிழர் களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத்தாகக் கூறப்படும் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பார்த்திபன்
தமிழகத்தில் அரசியல் கோமாளிகள் மட்டுமல்ல, மன நோயாளர்களும் உண்டென்பதற்கு இதுவும் ஒரு எடுத்தக் காட்டு. தமிழகத்தில் தனது சக மாணவர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல் நடாத்தினார்கள் சட்டக்கல்வி மாணவர்கள். அதற்கு இந்த வக்கீல்கள் எதை எரித்து தமது எதிர்ப்பைக் காட்டினார்கள்????