அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சீனாவின் நான்காவது ரொக்கட் ஏவுகணைத்தளம் 2013ல் இயங்குமென அறிவிப்பு

china.jpgசீனா ஹைனான் தீவில் வென்சாங்க் நகரில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைத்து வருகிறது. இது சீனாவின் 4வது ராக்கெட் ஏவுதளம் ஆகும். இந்த ஏவுதளம் எதிர்வரும் 2013ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும்.

இந்த ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதன் இயக்குநர் வாங்க் வெய்ச்சாங்க் தெரிவித்தார். சீனாவின் விண்வெளித் திட்டத்தை இராணுவம் தான் செயல்படுத்தி வருகிறது. அடுத்தபடியாக அது விண்வெளி வீரர்களை விண்ணுக்கு செலுத்த இருக்கிறது.

சீனா கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி வீரரை விண்ணுக்கு செலுத்தியது. விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய 3வது நாடு சீனா தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன விண்வெளி வீரர்கள் 68 மணி நேரம் விண்வெளியில் நடந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு ஹபரனையில் – 18ஆம் திகதி ஆரம்பம்

cheif_ministers_meeting.pngமாகாண முதலமைச்சர்களின் 26ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை ஹபரனயில் உள்ள ஹபரன சாயா கிராமத்தில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.

இவ்வருட மாநாட்டின்போது மாகாண சபைகளின் சுமுகமான செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள சட்டமூலங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதி, முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஒன்றும் இந்ந மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்காக தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண முதலமைச்சர் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட முதலமைச்சர்கள் மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

ஜெ வாங்கிய விமானம்-அரசுக்கு இழப்பு ரூ17 கோடி

09-airways-99.jpgவிமானங் களை அதிகம் பயன்படுத்தி செலவு இழுத்து வைக்கும் மற்ற அரசியல்வாதிகள் மத்தியில், விமானத்தையும் ஹெலிகாப்டரையும் முதல்வர்ருணாநிதி மற்ற விஐபிக்களோ பயன்படுத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு ரூ. 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சுற்றுப்பயணத்துக்காக ஐந்து விமானங்களை, மூன்று ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளார். தமிழகத்தில் முதல்வர், விஐபிக்களின் பயன்பாட்டுக்காக செஸ்னா ரக விமானமும் மற்றும் பெல் ரக ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளன.

இதில் செஸ்னா விமானம் கடந்த 1995ல் ஜெயலலிதா  முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதி இந்த பணத்தில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்களை வாங்கி மக்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.மேலும் அந்த செஸ்னாவிமானம் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதையும்கருணாநிதிதவிர்த்து வருகிறார்.

முதல்வர் கருணாநிதி  தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது ரயில், காரில் தான் செல்வார். தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தான் இதை எப்போதாவது பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 6 ஆண்டுகளில் செஸ்னா விமானம்  438.1 மணி நேரம் தான் பறந்துள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு சுமார் 6 மணி நேரம் பறந்துள்ளது. 9 பேர் உட்கார்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட ஹெலிகாப்டர் இந்த ஆண்டும், 2007ம் ஆண்டும் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை. சோதனைக்காக மட்டுமே 10 முறை இயக்கப்பட்டுள்ளது.

ஆனால், விமான போக்குவரத்து விதிகளின்படி ஒரு விமானத்தை ஒரு மாத காலத்தில் குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது இயக்க வேண்டுமாம்.

இது குறித்து முன்னாள் விமானியும், விமான பாதுகாப்பு  நிபுணருமான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், ஹெலிகாப்டர்களை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். ஒரு மாதத்துக்கு 100 மணி நேரமாவது இயக்க வேண்டும். அப்படியில்லாத சமயத்தில் அரசு ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருப்பதை விட வாடகைக்கு எடுப்பதே சிறந்தது. அதே போல விமானங்கள் சும்மா நின்றாலும் பராமரிப்பு செலவுகள் மிக அதிகம் என்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க புலம்பெயர் இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு

rudrakumarrudhrakumar.jpgநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவது தொடர்பில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராஜா பத்மநாதன், கடந்த மாதம் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகளின் எஞ்சியிருக்கும் பிரதிநிதிகள் தற்போது தங்களின் நடவடிக்கைகளை ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் அணுகுமுறை அரசியல் ரீதியிலேயே இருக்கும், வன்முறை பாதையில் இருக்காது என்றும் அவர்கள் முன்பு கூறியதை தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான பயண எச்சரிக்கை தளர்வு : பிரிட்டன் தெரிவிப்பு

sri-lanka-hotels.jpgஇலங்கைக் கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா தளர்த்தியுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய திணைக்களம் அறிவித்துள்ளது.  இலங்கை விஜயங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென்று பிரித்தானிய அரசாங்கம் முன்னர் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது அந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மார்க் கொடிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக இதுவரை காலமும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தளர்த்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் அல்லது தங்கியிருக்க உத்தேசித்திருப்போர் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவு செய்வதன் மூலம் நன்மைகளை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகப் பிரித்தானியா அறிவித்துள்ளது

ரவூப் ஹக்கீம் வருகைக்கு அக்கரைப்பற்றில் எதிர்ப்பு : சில இடங்களில் கறுப்புக் கொடி

Hakeem SLMC Leaderஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ.) வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதான வீதியூடாகப் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.  அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 9ஆவது ஆண்டு கத்தமுல் குர் ஆன் மற்றும் புனித ரமழான் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று மாலை அக்கரைப்பற்று செல்லவிருக்கின்றார்.

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று நகர், தைக்கா நகர், பட்டியடிப்பிட்டி பாலம் ஆகிய இடங்களில் வீதியின் குறுக்கே டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்றுக்கும் கல்முனைக்குமிடையில் நண்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் ஒருசில பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய அலுவல்கள் வழமை போல் நடைபெற்றன. ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில இடங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படவில்லை – மனித உரிமை ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர்

170909mohan_peris.jpgஇலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 12 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புலிப் பயங்கரவாதிகளால் பலவந்தமாக பணயம் வைக்கப்பட்டிருந்த இந்த மக்கள் தங்களை புலிகளிடமிருந்து விடுவித்து அரசாங்க நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்களுக்கான பாதுகாப்பை வழங்கமாறு அவர்களாகவே அரசாங்கத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் எங்களுடைய நாட்டு மக்கள். அவர்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அமைதியான சூழலில் மீள் குடியேற்றம் செய்யும்வரை அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் அரசியல்யாப்பு ரீதியானதும் தார்மீக ரீதியானதுமான கடமையாகும்

பத்திரிகையாளர் திஸ்ஸாநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மனித உரிமைகளுக்கான ஐ. நா உயரிஸ்தானிகர் திருமதி நவனீதம் பிள்ளை திஸ்ஸநாயகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்றாவதும் மிகவும் பாரதூரமானதுமான குற்றத்தை கவனிக்கத் தவறியுள்ளார்.

அது திஸ்ஸநாயகம் புலிகளிடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொண்டதும் அதனை புலிப்பயங்கரவாத பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி;யதுமாகும்.  இந்த உண்மைகள் திஸ்ஸநாயகத்தினாலும் மறுத்துரைக்கப் பட்டிருக்கவில்லை. எனவே திஸ்ஸநாயகம் இரண்டு வெளியீடுகளில் இலங்கை இராணுவத்தை விமர்சித்திருந்தார் என்பதற்காக மட்டும் அவர்மீது தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவது நியாயமற்றதாகும்.

திஸ்ஸநாயகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்குறிய சகல உரிமைகளும் வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

செனல் 4 வீடியோ காட்சிக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

free-media.jpgஇலங் கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் தூதுவராலயத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுதந்திர ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது

ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம்- வைகோ

16-vaiko.jpgஅண்ணா வுக்கு விழா எடுக்கும் உரிமை கொண்ட ஒரே இயக்கம் மதிமுகதான் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் நடந்த மதிமுக மண்டல மாநாடு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைகோ பேசுகையில்,

தமிழகத்தில் சூழ்ந்துகொண்டிருக்கும் துயரங்களில் இருந்து நம்மை காக்கும் ஒரே தலைவர் அண்ணா. பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பத் தான் இந்த மாநாடு. தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பறிபோய் கொண்டிருக்கின்றன. அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிய போனார் அண்ணா ஆனால் இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். மிருகத்தைவிட கொடுமையான முறையில் கொடுமைப்படுத்தி கொல்லப்படுகின்றனர்.

உலகுக்கு முதன் முதலில் ஆடை அணிய வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால் இன்று ஈழத்தில் ஆடையற்ற நிலையில் கை, கால்கள் எல்லாம் கட்டி கொடுமைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

ஆனால் இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் அது எல்லாம் பழைய படங்கள், இது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை முடிந்து விடவில்லை. தமிழகர்களிடம் இலங்கையில் நடக்கும் அவவலங்களை எல்லாம் எடுத்து கூறும் குறும்படங்களை கொண்டு செல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கிற தமிழ் சகோதர, சகோதரிகள் சேர்ந்து நாம் இருக்கும் சமுதாயத்தை புதிய தேசமாக மலரச் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் வரை, என் நாவில் சக்தி இருக்கிற வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். தனி ஈழம் மலர அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

இலங்கையில்தான் தான் எல்லாம் முடிந்து விட்டதே வைகோ ஏன் இங்கு புலம்புகிறார் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கூறுவது போல, எல்லாம் அழிக்கப்பட்டு விடவில்லை. இனிதான் பிரச்சனையே இருக்கிறது. பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம்.