இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படவில்லை – மனித உரிமை ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர்

170909mohan_peris.jpgஇலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 12 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புலிப் பயங்கரவாதிகளால் பலவந்தமாக பணயம் வைக்கப்பட்டிருந்த இந்த மக்கள் தங்களை புலிகளிடமிருந்து விடுவித்து அரசாங்க நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்களுக்கான பாதுகாப்பை வழங்கமாறு அவர்களாகவே அரசாங்கத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் எங்களுடைய நாட்டு மக்கள். அவர்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அமைதியான சூழலில் மீள் குடியேற்றம் செய்யும்வரை அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் அரசியல்யாப்பு ரீதியானதும் தார்மீக ரீதியானதுமான கடமையாகும்

பத்திரிகையாளர் திஸ்ஸாநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மனித உரிமைகளுக்கான ஐ. நா உயரிஸ்தானிகர் திருமதி நவனீதம் பிள்ளை திஸ்ஸநாயகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்றாவதும் மிகவும் பாரதூரமானதுமான குற்றத்தை கவனிக்கத் தவறியுள்ளார்.

அது திஸ்ஸநாயகம் புலிகளிடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொண்டதும் அதனை புலிப்பயங்கரவாத பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி;யதுமாகும்.  இந்த உண்மைகள் திஸ்ஸநாயகத்தினாலும் மறுத்துரைக்கப் பட்டிருக்கவில்லை. எனவே திஸ்ஸநாயகம் இரண்டு வெளியீடுகளில் இலங்கை இராணுவத்தை விமர்சித்திருந்தார் என்பதற்காக மட்டும் அவர்மீது தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவது நியாயமற்றதாகும்.

திஸ்ஸநாயகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்குறிய சகல உரிமைகளும் வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    //இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்//
    தடுத்து வைக்கவில்லை. முட்கம்பி வேலியால் அடைத்து வைத்திருக்கிறீர்கள். மக்கள் மீட்பு என்றீர்கள். மக்கள் அடைப்பாக்கி விட்டீர்கள்? இதுதான் தமிழ் மக்களை மீட்ட லட்சணம் என்றால் அடைத்தே வையுங்கள்? அது இதைவிட மேலானது.

    //திஸ்ஸநாயகம் புலிகளிடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொண்டதும் அதனை புலிப்பயங்கரவாத பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதுமாகும். //
    மகிந்த , பிரபாகரனுக்கு கொடுத்த பணத்துக்கு யாரை உள்ளே போடுவது? மகிந்த , சமாதானத்துக்காகவா பணம் கொடுத்தார்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படவில்லை – மனித உரிமை ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர் //

    சட்டமா அதிபர் அகதிகளின் முகாம் ஒன்றிற்குச் சென்று ஒரு வாரம் அந்த மக்களோடு மக்களாகத் தங்கியிருந்து, பின்பு தனது அறிக்கையைத் தந்தால் நம்ப இலகுவாக இருக்கும்.

    Reply
  • jeeva
    jeeva

    உங்களைப்பற்றி ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. படித்து உங்களின் ’சட்ட’ விளையாட்டுக்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

    http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2227/

    Reply