தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.