மாகாண முதலமைச்சர்களின் 26ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை ஹபரனயில் உள்ள ஹபரன சாயா கிராமத்தில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
இவ்வருட மாநாட்டின்போது மாகாண சபைகளின் சுமுகமான செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள சட்டமூலங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதி, முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஒன்றும் இந்ந மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.
தேர்தல் நடைபெறுவதற்காக தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண முதலமைச்சர் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட முதலமைச்சர்கள் மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.