நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவது தொடர்பில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராஜா பத்மநாதன், கடந்த மாதம் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகளின் எஞ்சியிருக்கும் பிரதிநிதிகள் தற்போது தங்களின் நடவடிக்கைகளை ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
தங்களின் அணுகுமுறை அரசியல் ரீதியிலேயே இருக்கும், வன்முறை பாதையில் இருக்காது என்றும் அவர்கள் முன்பு கூறியதை தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
varathan
வாக்கெடுப்பு நடத்த ஆரம்பமாகும்போது புலிகளின் எஞ்சியிருக்கும் கூட்டத்தையும் அவர்கள் விபரத்தையும் இலங்கை அரசு சேகரித்துக் கொள்ளும். புலிகளே உங்கள் வாக்குகளால் உங்களை அடையாளப்படுத்துங்கள்.
மாயா
பலர் வாழ்கையை எடுத்தவர்கள், மீதி இருப்போர் வாழ்க்கையும் (வாலையும்)எடுக்கப் போகிறார்கள். நல்லதுதான். அடுத்தவர்கள் நிம்மதியாக இருக்க விரல் அடையாளத்தால் வாக்களியுங்கள்.