அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் வர்த்தக சமூகம் ஒத்துழைப்பு வழங்கும்

economics.jpgபொருளா தாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளு க்கு ஜப்பான் அரசாங்கமும் ஜப்பான் வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிப்பொன் மன்ற தலைவர் யொஹெய் சசகாவ தெரிவித்தார்.

யொஹெய் சசகாவ நேற்று (7) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நாட்டு பிரதான வியாபாரிகளை ஊக்குவிக்க உள்ளதாகவும் கூறினார்.

இதனூடாக இலங்கையில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உச்ச ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு முதல் நிபொன் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இவர் உலக சுகாதார ஸ்தாபன ஆபிரிக்க, லத் தின் அமெரிக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி ஒன்றிய நாடுகளுக்கான விசேட ஆணையாளராகவும் பணியாற்றுகிறார். ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.

மேற்குலகு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; பிரதமர் ஜயரட்ண விசனம்

deemu.jpgவிடு தலைப்புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறுவதற்கு தமது மண்ணைப் பயன்படுத்தும் தமிழர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண வலியுறுத்தியுள்ளார்.வெளிநாடுகளிலுள்ள 15 இலட்சம் தமிழர்களில் சிலர் இலங்கையில் தமது சமூகத்துக்கு தனியான தாயகத்தை அமைக்கும் நோக்கத்துடனான பிரிவினைவாத இயக்கத்தை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக தமது மண்ணை அவர்கள் பயன்படுத்துவதை நிறுத்துவது தொடர்பாக மேற்குலகு போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு நிருபர்கள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மே 17 தொடக்கம் சுவிட்ஸ்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிக்கும் நடவடிக்கையை புலிகளின் அனுதாபிகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதில் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மேலதிக விபரம் எதனையும் தெரிவித்திருக்கவில்லை என்று ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.

மற்றொரு நாட்டிற்கு எதிராக எமது மண்ணைப் பயன்படுத்துவதை நாம் அனுமதிப்பதில்லை. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக போதியளவு நடவடிக்கைகளை மேற்குலகு எடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் இது தொடர்பாக அதிகளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜயரட்ண கூறியுள்ளார்.

அதேசமயம் 1983 இலிருந்து அமுலிலிருந்து வரும் அவசரகால ஒழுங்குவிதிகள் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க திட்டமிடுவதாகவும் இலங்கைத் தீவுக்குள் உள்ள செயலற்று இருக்கும் போராளிகளை இயங்கவைக்க முயற்சிக்கக்கூடும் என்றும் பிரதமர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

சுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம்

lawyer.jpgசுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளது. முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதினால் அதற்கு சமீபத்தில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது.

குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தினை வைபவ ரீதியாக காலை 9 மணிக்கு திறந்து வைப்பார். கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில மொழியில் உ/தரம் கற்பிக்க 554 ஆசிரியர்கள்- திங்கள் பத்திரிகையில் விண்ணப்பம்

teachers.jpgஆங்கில மொழியில் க.பொ.த. உயர் தரம் கற்பிப்பதற்கென 554 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. இது தொடர்பான விண்ணப்பம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) சகல தேசிய பத்திரிகைகளிலும் வெளியாகுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குணவர்தன இதுபற்றி அறிவித்தார். “வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 85 பாடசாலைகளில் உயர்தரம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில ஆசிரியர்கள் போதியளவு இல்லை என்று கூறுகிறார்கள். இந்தக் குறையை நிவர்த்திக்கும் வகையில் 554 ஆங்கில ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விஞ்ஞான பாடத்திற்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் உள்ளனர். வர்த்தகம், கலை பிரிவுகளுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒரு பாடத்தினைக் கற்க குறைந்தது 20 மாணவர்களாவது இருந்தால் அந்தப் பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியர் பெற்றுக்கொடுக்கப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 15 இல் ஆரம்பம்

cricket-tournament.jpgஇலங் கையில் நடைபெறும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.  இதில்  இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் 19 இல் நடக்கும் லீக் போட்டியில் மோதுகின்றன.

இலங்கையில் 10 ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் 24 ஆம் திகதி வரை தம்புள்ளையில் நடைபெறும்.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜூன் 24 ஆம் திகதி நடக்கும் இறுதியாட்டத்தில் விளையாடும்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் சாம்பியன் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை (ஜூன்16)  எதிர்கொள்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (ஜூன்19), இலங்கை (ஜூன்22) அணிகளுடன் மோதுகிறது.

இதுவரை நடந்துள்ள இத்தொடரில் இலங்கை 1986,1987,2004,2008 இந்தியா (1984, 1988, 1990, 1991, 1995) தலா நான்கு முறை சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணிஒருமுறை (2000) மட்டும் கிண்ணம் வென்றுள்ளது.

கசாப் மேன்முறையீடு

kasab.jpgமும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்புடன் பேசி முடிவு எடுக் கப்படும் என்று அவனது சட் டத்தரணி கே.பி பவார் கூறினார்.

மும்பைத் தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவனது சட்டத்தரணி கே.பி பவார் நிருபர்களிடம் கூறியதாவது :-நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யலாம். அவ்வளவுதான்.

கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது மும்பை மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும்.

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மேவின் சில்வா இராஜினாமா!

mervyn2.jpgபுதிய பாராளுமன்றத்தின் ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவியேற்ற மேர்வின் சில்வா தான் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று மாலை தனது இராஜினாமாக் கடிதத்தைத் தயார் செய்து விரைவில்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தனது இந்த முடிவுக்கு எந்த அமைச்சர்களும் காரணம் அல்லவெனக் கூறிய அவர் ஊடகவியலாளர்கள் முன்போலவே எப்போதும் தன்னுடன் தொடபு கொள்ளலாம் என்றும் கூறினார்.

பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக பாரிய அபிவிருத்திப் பணிகளை நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவூம் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இலங்கை மீது நிபந்தனைகள் கிடையாது

eu-flag.jpgஜி.எஸ்.பி வர்த்தகச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மீது எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறைச் செயற்பாடுகளை தான் மதிப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

திங்கள் முதல் யாழ் – முல்லைத்தீவு பஸ் சேவை

jaffna.jpgயாழ் – முல்லைத்தீவு பஸ் சேவையை மீண்டும் திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சுழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறைக்கும் – கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பருத்தித்துறைக்கும் – கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கைக்கு பங்காளி அந்தஸ்த்து – முக்கிய உடன்படிக்கைகளில் நேற்று இலங்கை கைச்சாத்து

glpeiris.jpgநாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :- சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.

அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.